பக்கம்:காகித உறவு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

61


 இப்படித்தான் எறிய வேண்டும் என்று ஒரு முறை செய்முறைப் பயிற்சி மூலம் விளக்கிக் காட்டிய தந்தை இப்போது கைகளைப் பிசைந்த போது, குமார் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற அவனறியாத பழமொழியை நிறைவேற்றிய திருப்தியில் அம்மாவையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற லட்சிய உந்தலில் 'டர்ட்டிஃபெல்லோ. கெட் அவுட் மேன் 'என்று கத்தியபோது, பலர் புரியாமலும் கொஞ்சம் சங்கடமாகவும் விழித்த போது, ஆன்டிக்காரி 'ஐதிங்... நம்ம குமார் ஐ.பி.எஸ். சர்வீஸுக்குத்தான், ஃபிட்', என்று சொன்னதும் எல்லோரும் சிரித்தார்கள். பலர் ஸ்டேட்மெண்டை வழிமொழிந்தார்கள்.

"எஸ்.எஸ் இவனுடைய டெம்பரமெண்டுக்கு போலீஸ் வேலைதான் லாயக்கு"

"போலீஸ்லயும். இவன் லா அண்டு ஆர்டர் பிராஞ்சுக்கு ரொம்பப் பொருத்தம். டர்ட்டி ஃபெல்லோன்னு எப்படி சவுட் பண்றான் பாருங்க!"

‘சவுட் பண்ணும்போது. அவன் முகத்தைப் பார்த்தீங்களா? இப்பவே ஐ.பி.எஸ். வாங்கிட்டவன் போலில்ல?

'எனக்கென்னவோ...ஹி வில் மேட் பார் எ டாக்டர்னு' நினைக்கிறேன்?

- "டர்ட்டியா வரவங்களையே சகிச்சுக்க முடியலே இவனால, டர்ட்டி ஆபரேஷன்களை பண்ண முடியுமா?"

உடனே எல்லோரும் சிரித்தார்கள். குமாரைப் பார்த்துப் பெருமையோடு சிரித்தார்கள். முனுசாமியைப் பார்த்து எரிச்சலோடு சிரித்தார்கள். முனுசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களது சொற்கள் காதில் விழுந்தாலும் அவற்றின் அர்த்தம் மூளையில் ஏறவில்லை. என்றாலும் தன்னைப் பரிகசிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு தன்னைத்தானே தள்ளிக்கொண்டு, பொங்கிவந்த அழுகையை அடக்கிக் கொண்டு சிறிது தூரம் நடந்து, செர்வண்ட்ஸ் குவார்ட்டர்ஸ் அருகேபோய் நின்று கொண்டான்.

காத்தாயி வந்து விட்டாள். அவளும் இன்னும் இரண்டும் பேருமாகக் கொண்டு வந்த தட்டுக்களை, விருந்தாளிகள் வாங்கிக்கொண்டு, உதட்டில் பட்டும் படாமலும் கடித்துக் கொண்டு, ஜோக்குகளாக சிலவற்றைச் சொல்லிக் கொண்டு, சிரிப்புக்களாக உதடுகளைப் பிதுக்கிக் கொண்டு நின்றார்கள்.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, காத்தாயி, எஜமானியம்மாள் கொடுத்திருந்த சில தின்பண்டங்களை முந்தானையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/63&oldid=1383302" இலிருந்து மீள்விக்கப்பட்டது