பக்கம்:காகித உறவு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

63


 'ஏமாத்த மாட்டியே'

‘சும்மா வாடா"

குடிசைக்குப் போன காத்தாயி, சொன்னதை மறக்க முடியாத அளவுக்கு முனுசாமி அவளைக் குடைந்து கொண்டிருந்தான். கொத்து வேலைக்குப் போகும் கணவனிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். 'முனுசாமிக்கு பிறந்த நாள் வைக்கணும், கேக் வாங்கிட்டு வா...' -

'ஒன்கு பைத்யமா மே”

'பிள்ளக்கி பொறந்தநாள் வைக்காட்டி பைத்தியம் பிடிச்சிடும்'

'அப்பன் கோவணத்துல கிடக்கப்போ.. பிள்ள இழுத்து மூடுன்னானாம்.'

'அந்தக் கதயே வாணாம். மொதலாளி கிட்ட என்னா சொல்லுவியே - தெரியாது. குய்ந்தக்கி ஒரு ஷர்ட் வாங்கணும், கேக் வாங்கணும்.'

"அப்புறம்.'

அப்புறமா? அப்புறம் ஒனக்காச்சு. இல்லன்னா எனக்காச்சு. ஆமாம்!

மாசி மாதம் இரண்டாம் தேதி இரவில் காத்தாயி புருஷன் பதினைந்து ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, "இனிமேல். பிறந்தநாள். அது இதுன்னு சொன்னாக்கால்... மவளே.... அப்புறந் தெரியுஞ் சேதி... பதினைஞ்சி ரூபாய குடுத்துக்கிட்டே மொதலாளி கேக்காத கேள்வில்லாம் கேட்டுப் புட்டான் என்று எரிந்து விழுந்தான்.

பேச்சு வார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்த அவளின் இரண்டாவது மகள் காந்திமதி, நான் எப்போம்மா பிறந்தேன் என்றாள் சாதாரணமாக, காத்தாயியும் சாதாரணமாகச் சொன்னாள்.

நீயா. இவன் பிறந்து. சரியா. இரண்டாவது வருசத்துல. மாசி மாசம் ஒண்ணாந் தேதி பொறந்தே. ஒப்பன் என்னை விட்டாத்தானே. ஏய்யா இப்படிப் பார்க்கிறே வெக்கமா கீது... போய்யா. அந்தண்ட"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/65&oldid=1383309" இலிருந்து மீள்விக்கப்பட்டது