பக்கம்:காகித உறவு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



64

பிறக்காத நாட்கள்



காந்திமதி அம்மாவின் முன்னால் வந்து ஒரு வெடிகுண்டை வீசினாள்.

'அப்படின்னா நேத்தே... எனக்கும் பொறந்த நாள் வச்சிருக்கணும். ஏன் வைக்கல...'

காத்தாயி, வாயடைத்து நின்றபோது, காந்திமதி கத்தினாள்.

'எனக்கும் வைக்கணும், எனக்கும் பாவாடை வாங்கணும். அண்ணனுக்குச் சொக்கான்னா... எனக்கு. கவுன் வேணும்.'

இதற்குள், இப்போதைக்குக் கடைக்குட்டியான, ஆறு வயது வாண்டுப் பயல், எனக்கும். நாள் வைக்கணும்' என்று சொல்லிவிட்டு செல்லமாகச் சிணுங்கினான். காந்திமதி, திட்ட வட்டமாகக் கத்தினாள். -

'அண்ணனுக்கு முன்னாடி... நான் பொறந்திருக்கேன். எனக்குத்தான் பொறந்த நாள்.'

காத்தாயியும் அவள் கணவனும் வாயடைத்து நின்றார்கள். எப்படியோ அழுத காந்திமதியும், கம்பீரமாக தன்னைப் பார்த்துக் கொண்ட முனுசாமியும், சிணுங்கிய வாண்டும், இரவுக்குள் அடைக்கலமானார்கள். காலையிலேயே எழுந்து வேலைக்குப் புறப்பட்ட கணவனை இன்னிக்கு வீட்ல இருய்யா... முன்சாமி பிறந்த நாளும் அதுவுமா என்று இழுத்தபோது, 'ஒனக்கு.. பைத்யமா மே. இன்னிக்கு நாளக்கி மறுநாளக்கி காத்தாலயே வந்துடுறதாச் சொன்னதால்தான் - மொதலாளி கடன் குடுத்தான். சீக்கிரமாபோய் லேட்டா வாரத. கடனுக்கு வட்டி. புரியதாமே..? என்று சொல்லிவிட்டு, அதற்கு காத்தாயி பதில் சொன்னபோது, அவன் வீட்டில் இல்லை.

காத்தாயி, பதினைந்து ரூபாயை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அடையாறில் போய், ஒரு ரெடி மேட் சொக்கா வாங்கணும், மூணு ரூவாய்க்கு... கேக் வாங்கணும்... பத்து மெழுவர்த்தி வாங்கணும் இந்த காந்திப் பொண்ண. எப்படிச் சமாளிக்கறது?

குழந்தைகளுக்கு, தெருமுனை ஆயாவிடம் இருந்து ஆப்பம் வாங்கிக் கொடுத்துவிட்டு, குடிசைக் கதவை முக்கால்வாசி சாத்திவிட்டு, அவள் புறப்பட்டபோது, மோட்டார் பைக்கில் வந்த ஒருவர், எஞ்ஜினை நிறுத்தாமலே கர்ஜிக்க வைத்துக் கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/66&oldid=1383311" இலிருந்து மீள்விக்கப்பட்டது