பக்கம்:காகித உறவு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

69



"ஒங்கள எடுத்து வைக்கச் சொன்னேன். வைக்கலியா? படிச்சிப் படிச்சி சொன்னேன்...!"

வயதானவரும் திரும்பிக் கத்தினார் :

"நீ செக் பண்றதுதானே?"

ஆசைதீர சாப்பிடலாம் என்ற தைரியத்தில் உலவிக் கொண்டிருந்த இளம் பெண்டுகள் பாப்பாவின் கையைப் பிடித்து அதை நண்டு மாதிரி தூக்கிக் கொண்டு முகாமருகே வந்தார்கள். "அதுக்குத்தான். நான் ரெண்டு ஸ்டவ் எடுத்து வைக்கச் சொன்னேன். நீங்க ஒண்ணுகூட வைக்கல..." என்றாள் இளம் பெண் ஒருத்தி.

"பேசாம தென்காசில போய் சாப்புடலாம். இப்பவே பசிக்குது” என்றான் ஒரு வாலிபன்.

வயதான அம்மா, கண்ணாடிக் கணவனை எரித்து விடுவது போல் பார்த்தாள். அவள் வயிறு ஸ்டவ் மாதிரி பற்றி எரிந்தது. என்ன செய்வதென்று எல்லோரும் குழம்பிப்போய் இருக்கையில் செல்லக்கிளி விறகுக் கட்டைச் சுமந்துகொண்டு மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள்.

கண்ணாடிக்காரருக்கு ஒரு ஐடியா உதித்தது.

"அந்தப் பொண்னோட விறக வாங்கிச் சமைக்கலாமா?"

“விறகையா சமைக்கப்போlங்க" என்று ஒருத்தி 'விட்' அடித்தாள். வயதான அம்மா இந்த விட்டை ரசிக்கவில்லை. நல்ல பசி அவளுக்கு அதோடு சமைக்கப் போகிறவள் அவள் இல்லை. "ஆமா அதுதான் நல்ல யோசன. விறகால சமையல் பண்ணுனா ருசியா இருக்கும்."

பேச்சு மேற்கொண்டு நீள்வதற்கு முன்னதாக அந்தச் சிறுமி அடிவாரத்திற்கு வந்துவிட்டாள். அவர்களிடம் ஏதோ பேச வேண்டும் என்று நினைத்தாள். பளபளப்பாக இருந்த அவர்களிடம் பேசுவதற்குக் கொஞ்சம் வெட்கப்பட்டாள். பின்னர் விற்குக் கட்டைச் சிறிது தலைக்குள்ளேயே நகர்த்தி பாலன்ஸ் செய்து கொண்டே ஒரு தகவலை வெளியிட்டாள்.

"பொழுது சாயறதுக்கு முன்னாலே போங்க. ஏன்னா, தண்ணி குடிக்க புலி, ஓநாயில்லாம் அப்பவரும். ஒரு தடவை குளிச்சிக்கிட்டிருந்த ஒரு ஆள ஒரு புலி கொன்னுட்டு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/71&oldid=1383321" இலிருந்து மீள்விக்கப்பட்டது