பக்கம்:காகித உறவு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டாரம் படுத்தும் பாடு

பண்டாரம் மட்டும் அரசியலில் இருந்திருப்பானோயனால், மிகச் சிறந்த தலைவராகக் கருதப்பட்டிருப்பான். அந்த அளவிற்கு பிஸி. அவன். இருப்பினும் அலுவலகத்தில் அக்கெளண்டண்டாக மாட்டிக் கொண்டதால், அவனுடைய ‘பிராடுத்தனம்’ அடிக்கடி சேலஞ்ஜ் செய்யப்பட்டது. அதற்கு ஒரு வகையில் அவனும் காரணம்.

பொதுவாகத் தப்புத் தண்டா செய்பவர்கள் எல்லோரையும் அனுசரித்துப் போவார்கள். எதிரிகளிடமும் பல்லைக்காட்டி, அவர்களைத் தன் நண்பர்களாக்கிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால் பண்டாரம் இதற்கு விதிவிலக்கு. அவன் செய்யாது. விட்டு வைத்த எதுவும் தப்புத் தண்டாவாக இருக்க முடியாது. இந்த லட்சணத்தில், அலுவலகத்தில் உள்ள அனைவரிடமும் எகிறுவான். ஏடாகூடமாய் நடந்து கொள்ளான்.

அவனை எப்படியாவது எதிலாவது சிக்க வைக்கவேண்டும் என்பதில் பலர் கண்ணாக இருந்தாலும் கிரேட் ஒன் கிளார்க் கிருபாகரன் கருத்தாக இருந்தான். அலுவலகத்திலேயே நேர்மையானவன் அவன். நேர்மை இல்லாத எந்த நிர்வாகமும், பொது மக்களுக்கு எதிரான ஸ்தாபனம் என்று நினைக்கும் ‘கிறுக்கன்’

இதற்கிடையே சில ‘மைனர்’ பிராடுகள், அட்மினிஸ்டி ரேட்டிவ் ஆபீசருக்கு எத்தனையோ மொட்டை பெட்டிஷன்களைத் தட்டிப் பார்த்தார்கள். பலனில்லை, சொல்லப்போனால் தனியறையில் ஏர் கூலர், இதங் கொடுக்க சுழற்நாற்காலியில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கும் அட்மினிஸ்டிரேடிவ் ஆபீசர், நொடிக்கு நூறுதரம் ‘பண்டாரம் பண்டாரம்’ என்று காலிங் பெல்லை அழுத்தாமல் வெளியே வந்து கூப்பிட்டு அழைத்துப் போகிறார். முக்கியமான பைல்களை, இருவரும் நீண்ட நேரம் விவாதிக்கிறார்கள். பண்டாரம் சிரித்த முகத்தோடு வெளியே வருகிறான். வந்ததும் வராததுமாக “வார வட்டிக்கு... யாருக்குப் பணம் வேண்டும்?” என்று கேட்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/78&oldid=1384268" இலிருந்து மீள்விக்கப்பட்டது