பக்கம்:காகித உறவு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

77


‘மொட்டையர்கள்’ யோசித்தார்கள். அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசரும் அயோக்கியன் பண்டாரத்துக்கு நெருக்கமான பெரிய அயோக்கியன் ஆகையால் இப்போது மொட்டைப் பெட்டிஷன்கள் எழுதுவதை நிறுத்தி விட்டார்கள்.

மொட்டைப் பெட்டிஷன் வரும் போதெல்லாம் அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசர், பண்டாரத்தை வரவழைத்து, பெட்டிஷனிலுள்ள குற்றச்சாட்டுகளை, பைல்களை வைத்து, விவாதிப்பதோடு, பண்டாரத்துக்கு எச்சரிக்கைமேல் எச்சரிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் என்பதும், பண்டாரம் அத்தனை உதைகளையும் வாங்கிக் கொண்டு வெளியே வரும் போது, அவருக்கு, கான்பிடன்ட் மாதிரி ஓர் அபிப்ராயத்தைக் கொடுப்பதற்காகச் சிரித்துக் கொண்டு வருகிறான் என்பதும், அந்த அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது.

மைனர் பிராடுகள், மேஜர் பிராடுக்கு எதிராக மொட்டைப் பெட்டிஷன் வேலையைப் புதுப்பித்தார்கள். அட்மினிஸ்ட்டிரேட்டிவ் ஆபீசருக்குப் பதிலாக டில்லியில் இருக்கும் டைரெக்டருக்கு, பண்டாரத்தின் சகல பிராட் லீலைகளையும் விலாசப்படுத்தி எழுதினார்கள். மொட்டைப் பெட்டிஷனுக்கு வார வட்டிக்கு ஆபீஸ் பணத்தை விடுவதைத் தலைப்புச் செய்தியாகப் போட்டு அனுப்பி வைத்தார்கள்.

பதில் இல்லை. அவர்கள் சளைக்கவில்லை. ஒன்று... இரண்டு... நாலு... எட்டு...

மொட்டைப் பெட்டிஷன்கள் கத்தை கத்தையாகப் பறந்தன. அவற்றை பழைய பேப்பர்க்காரர்களிடம் போட்டால், பேப்பர்காரர் செய்கிற திருட்டுத்தனம் தவிர்த்து எடை மூன்று கிலோ தேறும்.

டில்லி டைரக்டரால் இதற்குமேல் பொறுக்க முடியவில்லை.

இனிப் பொறுத்தல் தவறு.

டைரக்டர், கடுவன் பூனையான டெபுடி டைரக்டர் தேஷ்முக்கை விசாரணைக்கு அனுப்பினார்.

மடிசார் வேட்டியுடன் சாதாரணமாக வந்த தேஷ்முக்கை, ‘கஸ்டமர்’ என்று நினைத்தனர் அலுவலக ஊழியர்கள். அவரைப் பார்த்ததும், அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீஸ்ரே அறைக்கு வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/79&oldid=1383347" இலிருந்து மீள்விக்கப்பட்டது