பக்கம்:காகித உறவு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

87


அதிலிருந்தே. இன்னொன்ன உண்டாக்குறோமுன்னு நினைச்சி. மனச தேத்திக்கிட்டேன்"

"நான். அதச். சொல்லலடா... ஒன் வயல... மாமாவுக்கு குடுக்கச் சொன்னேன். யோசித்துப் பாத்தியா?"

"நீரு. என்ன சொல்றீரு?"

'அதாண்டா. ஒன் நிலத்த தாறியான்னு கேட்டேனில்ல?”

"மாமா... ஒமக்கே... இது நல்லா இருக்கா.”

“என்னடா பவுசு பண்ணுற... இந்த மூணு மரக்கால் விதப்பாட்ட வச்சிக்கிட்டு, என்னடா பண்ணப்போறே? கோட்ட கட்டப் போறியாக்கும்... மாமாவுக்குத் தந்தியான்னா எனக்குச் சேந்தாப்போல இருக்கும். டிராக்டர் நிறுத்தறதுக்கு. வசதியா இருக்கும்."

"அதோட நான் நடுத் தெருவில... நிக்கதுக்கும் வசதியா இருக்கும்."

"என்னடா... வாயி... நீளுது'

"பின்ன என்ன மாமா. நிலத்த. ஒம்ம மச்சினங்கிட்ட நீரு சொல்லித்தான். ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வச்சேன். பணத்த வச்சிக்கிட்டு... ஏதோ... சந்தைக்குச் சந்தை போயி... மசாலா சாமான்கள். வித்து. வயித்தக்களுவுனேன். ஒம்ம மச்சினன். அந்த மூணு மரக்கால் விதப்பாட்டுல. நீரு நெல்லு போட்டா. கரும்பு போட்டும் வரப்ப வெட்டியும் அட்டூழியும் பண்றாண்டா மாமாமவுக்காவது ஒன் நிலத்தத் திருப்புன்னு சொன்னதை வச்சி தோட்டத்த வித்து இதமீட்டுனேன் இப்ப. அரசன நம்பி புருஷன. விட்டது மாதிரி தோட்டத்த விட்ட என்னை வயலையும்விடச் சொன்னா என்னமாமா அர்த்தம்? நீங்க மட்டுந்தான் வயலு வச்சிக்கணுமா? அப்படியாவது சர்க்காருல. ஒரு சட்டத்தை போடச் சொல்லும்."

"ஒண்ணு கேட்டதுக்கு. ஒன்பது சொல்றியா. நீ எவ்வளவு. நாளைக்கி. வயல வச்சிருக்கன்னு பாத்துப்புடலாண்டா..."

"பாத்துப்புடலாம். மாடக்கண்ணு. டிராக்டரை நிறுத்து. எனக்கு. இது வண்டில்ல. என் பிணத்த சுமக்கிற ரதம்."

வினைதீர்த்தான், 'சீம' உர பெட்டியை பிடித்துக் கொண்டே, கீழே குதித்ததில் உரம் மண்ணில் சிதறியது. உரத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/89&oldid=1383472" இலிருந்து மீள்விக்கப்பட்டது