பக்கம்:காகித உறவு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

இரத்தத் துளிகள் பயிராகின்றன



அள்ளப்போனபோது, டிராக்டர் எழுப்பிய தூசி, அவன் கண்ணை மறைத்தது.

ஒரு வாரம் ஒடியது.

வீராசாமியின் முப்பத்திரண்டு மரக்கால் விதப்பாட்டிலும் துள்ளிக் குதித்து நீர் பாய்ந்தது. வயல் முழுவதும் நீர்பாய்ந்து விட்டதும், பண்ணைப்பெண் சகதி சகிதமான மண்வெட்டியை வைத்துக் கொண்டு, கொன்னுப்புடுவேன்' என்பதுபோல் ஆட்டியபோது சரலில் உட்கார்ந்து டிரான்ஸிஸ்டர் ரேடியோவைக் கேட்டுக்கொண்டிருந்த வீராசாமி, இத்துடன் என்ற வார்த்தை வந்த வானொலிப்பெட்டியை, மூடிவிட்டு, பம்ப்செட் அறைக்குள் போய், என்ஜினை 'ஆப்' செய்துவிட்டு, கதவை மூடப்போனார். அலறிக்கொண்டு வந்தவன்போல் தோன்றிய வினைதீர்த்தானை, கண்களால் உருட்டிக்கொண்டே கதவை அங்குமிங்கும் ஆட்டினார்.

‘'எதுக்கு மாமா. ஆப் பண்ணுறிiயரு?"

"என் என்ஜின ஆப் பண்ண ஒன்கிட்ட கேக்கணுமா?"...

"மாமா ஒமக்கே இது நல்லா இருக்கா... என் வயலுக்கு தண்ணி பாயாண்டாமா?"

"ஒன் வயலுக்கு. தண்ணி பாய்ச்ச நான் என்ன... ஒன் வேலக்காரனா. என்னடா உன்மனசில. நினைச்சுக்கிட்டே."

'இப்படி பேசுறது நல்லா இல்ல மாமா... நல்லா நினைச்சிப்பாரும். கமலக்கிடங்கு ஒமக்கும்... எனக்கும் பொதுச் சொத்து. அது இருந்தாத்தான் நான். மாட்டை வச்சி. கமல அடிக்க முடியும்... மாடு வாங்கப்புறப்பட்ட என்கிட்ட என்ன சொன்னீயரு? ஏய். மூணு மரக்கால் விதப்பாட்டுக்கு. என் பம்ப் செட்டுலயே... தண்ணி பாய்ச்சிக்க... கமலக்கிடங்க... மூடி, நான் அதுல பயிர் வைக்கேன். ஒனக்கும் தண்ணி கிடச்சதுமாதிரி ஆச்சு'. எனக்கும், கொஞ்சம் நிலம் கிடைச்சது மாதிரி ஆச்சுன்னு சொன்னீரு. இப்போ கமலக் கிடங்கயும் எடுத்துக்கிட்டு. பம்பு செட்டையும் மூடுனா... என்னா மாமா அர்த்தம்?"

"ஒன் கமலக் கிடங்கு பங்கு எனக்கு வேண்டாம். ஒனக்கு அதுல... மூனடி வரும். தாராளமா எடுத்துக்க..."

"மாமா. நீரு பேசறது நியாயமில்ல."

"ஓஹோ ஹைகோர்ட் ஜட்ஜ் சொல்லிட்டியளோ. சரியாத்தான் இருக்கும். நீ. ஏமுழா. பல்லைக்காட்றே இந்தா. கதவை மூடு”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/90&oldid=1383351" இலிருந்து மீள்விக்கப்பட்டது