பக்கம்:காகித உறவு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

93


"தலவலி போயி... திருகுவலி வந்துட்டு.”

"என்ன சொல்ற..."

"இது. வீராசாமி சின்னையாவோட நிலமாமில்லா..."

"இன்னுமாழா. அவன். ஒனக்குச் சின்னையா..."

"இந்த நிலத்துல இருக்க வீட்ட காலி பண்னணுமாம். நிலம் அவங்களுக்கு வேணுமாம்... காலி பண்ணாட்டா... இடிப்பார்களாம்."

"யாரு சொன்னா?” "வீராசாமி மவன் பெருமாள் வந்துட்டுப் போனான். ஏன் கவலப்படுறிரு. நாம இருபது வருஷமா குடியிருக்கோம். யாரும் எதுவும் பண்ண முடியாது" -

"நீ சொல்றது சரிதான். வீராசாமி. இப்பதான் குடிச போட்டேன்னு பிரிப்பான். நாம கோர்ட்டுக்குப் போவணும். வக்கீலப் பாக்கணும். அவனுக்கு வீட்டப் பிரிச்சது எத்தனாவது சட்டத்துல. குத்தமுன்னு சொல்லுறதுக்கே அம்பது ரூபாய் குடுக்கணும். குத்தத்த சொல்றதுக்கே இவ்வளவுன்னா... அத... நிரூபிக்கதுக்கு எவ்வளவு ஆவும். நினைச்சிப்பாரு..."

சரி... முதல்ல சாப்பிடும்... பேசாம... அந்த குடிகெடுப்பாங்கிட்டே... நிலத்த குடுத்திருக்கலாம்"

வினைதீர்த்தான் தூங்கவில்லை. மறுநாள், வீராசாமியின் எதிர்ப்புக்கு இடையிலும் தான் மனிதன் என்பதை நிரூபிக்கும் மாடக்கண்ணு மச்சானையும், வாடகை இறவைக்காரரையும் நெஞ்சார நினைத்துக் கொண்டு, சும்மா படுத்துக் கிடந்தான்.

காலையில் எழுந்து, வயலுக்குப் புறப்படப்போன அவனிடம், வாடகை இறவைக்காரர் வந்தார்.

“என்ன தாத்தா.. இன்னுமா. வயலுக்குப் போகல..."

"சுண்டைக்காய் கால்பணம். சுமகூலி முக்கால் பணம்."

"என்ன தாத்தா சொல்றீரு." "என் பேரன். மாடுங்கள. பத்திக்கிட்டு போயிருக்கான். ஒரு பீடியை பத்த வைக்கதுக்கு. அவன். நின்ன போது. ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/95&oldid=1383384" இலிருந்து மீள்விக்கப்பட்டது