பக்கம்:காகித உறவு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

இரத்தத் துளிகள் பயிராகின்றன


மாடு. வீராசாமியோட வைக்கோலுல ஒருவாய் வச்சிட்டு. உடனே. அவன் ரெண்டு மாட்டையும் பவுண்டரில. பத்தி. அடச்சிட்டான்."

"இது. வேணுமுன்னு நடந்திருக்கு. பரவாயில்ல. முன்சிப்ப பார்த்து. அபராதத்த கட்டிடலாம். நானே கட்டுறேன்..."

"நான் முன்சீப்ப தேடிப்போனேன். அந்தப் பயமவன் தலமறவா ஆயிட்டான். அவன். வீராசாமி. அக்கா மவன்தானே. சாயங்காலந்தான் வருவான்”

"அப்படின்னா என் பயிரு என் பயிரு”

வினைதீர்த்தான் ஓடினான். சத்திய ஆவேசத்துடன், அந்த ஆவேசமே ஒர் உந்தலாக, வயலைப் பார்த்து ஓடினான். தண்ணீர் கொடுக்க முன் வந்த மாடக்கண்ணு விழுந்து கிடந்த ஒரு கிழட்டு மாட்டின் வாலைக் கடித்து அதை, எழுப்பப் பார்த்தார். மாடு நகருவதாகத் தெரியவில்லை.

வினைத்தீர்த்தான் ஓடினான். தன் வயலை நோக்கி ஒடினான். விதவைப் பெண்போல், பதவியிழந்த அரசியல்வாதி போல, பட்டினி கிடந்த குழந்தைபோல, நெற்பயிர்கள் கருகப் போவதுபோல் தோன்றின. பக்கத்து வீராசாமி வயலில் நெற்பயிர்கள் ‘பேபிஷோ’ காட்சிபோல் தோன்றின. நீர் விரைந்து பாய்ந்தது அருகாமையில். அவற்றின் அருகில் நின்ற வீராசாமியும் அவரது வகையறாக்களும் “அடுத்த பருவத்துல. இந்த ஒரு தட்டுலயும். வாகை மரத்தையும் முருங்க மரத்தயும். வச்சிடணும்" என்று வினைத்தீர்த்தானுக்குக் கேட்கும்படியாகக் கேட்க வேண்டும் என்னும்படியாகப் பேசினார்கள்.

வினைதீர்த்தானால் தாள முடியவில்லை. தாங்க முடியவில்லை.

“ஏய்... அற்பப் பயலுவளா.. என் வயல...கருக்குனதுமில்லாம. நான் அடுத்த வருடத்திலேயும். பயிரிடாம போறதுக்காக. மரத்த வச்சி. என் வயலுக்கு... இருட்டி விடப் போறியளா... செய்யுங்கடா...அளிக்கப் பணமும்... அம்பலத்துக்கு ஆளும் இருக்கிற திமுறுலயாடா... பண்ணுறீங்க... பண்ணுங்கடா... ஊரு கேக்காட்டாலும். உதிர மாடன் கேக்காம போகமாட்டாண்டா.”

அவ்வளவுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/96&oldid=1383356" இலிருந்து மீள்விக்கப்பட்டது