பக்கம்:காக்கை விடு தூது.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தமிழரெலாஞ் சார்வரென் றுன்னி — இமிழ்திரைநீர்
சூழ்ந்த வுலகின்கண் தூய்மையிலாச் சொற்களைப்பெற்
றேய்ந்தா ரியத்தின் இழிசொல்லாய் — வாய்ந்த
உருதுமுதற் பன்மொழியி லுற்றிடுசொற் பெற்றுக்
கருதும் இலக்கியக் கண்ணற் — றொருபொழுதும்
இந்நாட்டாா்க் கேலா திழிவுதரும் இந்தியைத்
தென்னாட் டவர்தம் சிறுமகார் — முன்னான
அங்கிலத்தி னோடே யவசியமாய்க் கற்றற்குத்
தங்கியதோர் திட்டந் தனைவிதித்தார் — இங்குற்
றருந்தமிழ ரெல்லாரும் அஞ்சியொன்று கூடிப்
பொருந்து பல்கிளர்ச்சி செய்தே — வருந்துமிந்தி
எம்மைந்தர்க் கென்றும் இளவயதி லேறாதால்
அம்மைத் தமிழும் அழியுமால் — செம்மையிலா
இத்திட்டஞ் செந்தமிழா்க் கேற்புடைத்தன் றென்றரற்ற
அத்தகையோர் தம்மை அறிவிலியென் — றெத்திறத்தும்
தன்னேரிலாப் பெரியோர் தம்மை யிழித்துரைத்தே
எந்நாளும் மாறா வசையுரைத்தும் — உன்னாது
தான்கொணர்ந்த கட்டாய இந்தி தனையெதிர்க்கும்
மேன்மைத் தமிழர்களை வெஞ்சிறையிற் — றான்வைத்தார்
சாதிப் பிரிவைத் தகர்த்தும் எனவுரைத்தோர்
மேதினியில் அப்பிரிவை மேலாக்க — மேதக்க
தச்சரெலாம் ஆச்சாரி சார்விசுவ பார்ப்பனரென்
றுச்ச நிலைப்பெயரை ஓதாமல் — நிச்சலும்
ஆசாரி கர்மாவென் றாரு முரைக்கவே
பேசப் படுவதுவே பெற்றியெனக் — கூசாது
திட்டப் படுத்திஅவர் சீற்றங் கொளஅஞ்சிக்
கட்ட மடைந்ததனைக் கைவிட்டும் — ஒட்டாத்
தமிழ வழக்கறிஞர் தம்மவரோ டொத்து
மகிழு முயர்நிலையின் மன்னா — தமிழவே


1. "பேசப்படல் வேண்டுமென்றதனை" எனமுன்னர் அச்சிடப்பட்ட தொடர், என் ஆசிரியப்பெருந்தகை நாவலர் ச.சோ.பாரதியாரவர்கள் பணித்தவண்ணம் மேற்கண்டவாறு திருத்தப் பெற்றது.