10
'இந்து' தலையங்கத்தைப்பற்றி குறிப்பிட்டேன். நமது கழகம் எம். எல். ஏக்கள் தோற்றதைக் கண்டதும், பத்திரிகைக்காரர்கள் பலவித கருத்துக்களைத் தெரிவித்தார்கள். 'திராவிட நாடு' என்ற இலட்சியத்தைக் கை விடும்படி கூறினார்கள்.
கல்யாணம் நடந்து மனைவியைப் பெற்ற பிறகு தெருத்திண்ணையில் படுத்துக்கொண்டிரு என்று கூறுவதுபோல், திராவிட நாடுதான் கழகத்தின் லட்சியம் என்று தெரிந்து உறுதியானபிறகும் அதை விட்டுவிடு என்று கூறுகிறார்கள்.
50 எம். எல். ஏக்கள்தான் வந்துவிட்டார்களே, திராவிடநாடு பிரிவினையை விட்டுவிடுங்கள் என்று பத்திரிகைகள் கூறுகின்றன.
50 இடங்களுக்காகவா திராவிட நாடு? அதற்கா ஆன்றோர்களும் சான்றோர்களும் திராவிட நாட்டை வாழ்த்தினார்கள் —போற்றினார்கள் ? 50 இடங்களுக்காக ஒரு கட்சி லட்சியத்தை விட்டு விடுவதா?
50 எம். எல். ஏக்களுக்காகவா திராவிடநாடு லட்சியத்தை கட்சியின் கொள்கையாக வைத்திருக்கிறோம்? பொறுப்புடைய செயலா இது?
50 இடங்களில் கழகம் வெற்றி பெற்றது என்றால், மக்கள் எங்களைக் கவனிக்கிறார்கள், கொள்கைகளுக்கு ஊக்கம் காட்டுகிறார்கள், கழக லட்சியத்துக்கு ஆதரவு தருகிறார்கள் என்று பொருள். நான் இந்த நாட்டிலே தோன்றியிருக்கின்ற கேள்விக்குறி. என்னைத் தோற்கடிக்கலாம். ஆனால் கேள்விக் குறியாகி விட்டப் பிரச்னையை அழிக்கமுடியாது. கேள்விக்குறி என்று ஏன் கூறுகிறேன் என்றால்,
திராவிட நாடு வடவர் காலடியில் மிதிப்பட்டு சாவதேன் ? தமிழ் மொழியை மாய்க்க இந்தி புகுவதேன்? வாழ்க்கை முறை மாறாமல் இருப்பது ஏன் ? என்ற கேள்விக்குறியை எழுப்பும் பிரச்னை அது.
தி. மு. க. அந்த லட்சியத்தை கேள்விக் குறியாக மாற்றி, சட்ட சபையிலேயும், பாராளு மன்றத்திலேயும் கேட்கும்.