14
தி. மு. கழகம் சட்டசபையிலே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருக்கும். கழகம் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
சட்ட சபைக்குச் செல்லும் நமது தோழர்கள் வாக்குத்திறன் உடையவர்கள். எதையும் பொறுப்புடன் செய்வார்கள்.
என்னையும் என் தம்பிமார்களையும், திராவிடநாடு கேட்டதால் மக்கள் தோற்கடித்தார்கள் என்கிறார்கள். எஸ். ஏ. டாங்கே திராவிடநாடு கேட்டவரா ? ஏன் தோற்றார்?
தேள் கடித்துத் துடிப்பதால் ஆளைவிட தேள் பெரிதாகி விடுமா?
என். ஜி. ரெங்கா எந்த நாடு கேட்டார், தோற்றார் ?
திரிலோக சீதாராம் தோற்கடிக்கப்படவில்லையா ?
அசோக் மேதா என்ன சாமான்யமானவரா ?
கிருபளானி தோற்கடிக்கப்பட்டது ஏன் ?
இவர்களெல்லாம் திராவிடநாடு கேட்பவர்களா ?
பிறகு எல்லோரும் தோற்கடிக்கப்பட்டதேன் ?
டாக்டர் லோகியா தோற்றார், சின்னதுரை தோற்றார்.
எதிர்க் கட்சித் தலைவர்களை எல்லாம் தோற்கடிக்க ஏராளமான பணத்தைச் செலவு செய்தார்கள். காங்கிரஸ் எண்ணமிட்டுச் செய்த சதிச்செயல் இது.
அசோக்மேதா என்ன அண்ணாதுரையைப் போல சாதாரணமானவரா? 5 விரல்களிலே புள்ளி விபரங்களை அடக்கிவைத்திருப்பவரல்லவா? அவரை ஏன் தோற்கடித்தீர்கள்?
கிருபளானி என்ன காந்தீயப் பற்று அற்றவரா? அவர் பாராளு மன்றத்திலே பேசுகிறார் என்றால் பண்டித நேருவே கூர்மையாகக் கேட்டுக் கவனிக்கும் தன்மையில் பேசுபவரல்லவா? அவரை ஏன் தோற்கடித்தீர்கள்?
எதிர்க்கட்சித் தலைவர்கள் யார் யாரோ அவர்களை யெல்லாம் தோற்கடிக்க வேண்டுமென்பது காங்கிரசின்