உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

நீண்ட நாளைய திட்டம். இந்திய உபகண்டம் முழுவதும் திட்டமிட்டுப் பணியாற்றப்பட்ட சதி!

எதிர்க்கட்சித் தலைவர்களை தோற்கடித்தால் வெளி நாடுகளிலே காங்கிரசுக்கு ஆதிபத்திய புகழ் நிலைக்கும்.

அமெரிக்க பத்திரிகைகள் காங்கிரஸ் பெற்ற வெற்றியை வெளியிட்டதைவிட எதிர்க் கட்சித் தலைவர்கள் தோற்றதைத்தான் பெரிதாக எழுதியிருக்கின்றன.

வெளிநாட்டுக்காரர்களைப் பார்த்து, அசோக் மேதாவைக் கேட்டீர்களே,

பாடம்பெறவேண்டியது கழக மல்ல காங்கிரசே! இந்துவின் கருத்திலே குழப்பம் வாதத்திலே வலுவில்லை !

"இதோ பாருங்கள் அவர் தோற்றார். டாங்கேயை விசாரித்தீர்களோ இதோ அவரும் தோற்றார் பாருங்கள். அண்ணாதுரையை கேட்டீர்களே, அவரையும் பாருங்கள். சின்னதுரையா? அவரும் தோற்றார். கிருபளானியா? அவரும் மேனனிடம் தோற்றார்” என்று கூறிடும் நிலையை உண்டுபண்ணி விட்டார்கள். இது காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு வகையிலே லாபம்.

எங்கள் தோல்வியைக் காட்டி வெளி நாடுகளிலே ஏராளமான கடன்களைப் பெறலாம். காங்கிரசுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகமிருப்பதாகச் சொல்லலாம். இதற்காகவே திரைமறைவு சதித்திட்டம் செய்தார்கள். இந்த உண்மை போகப் போகத் தெரியும்.

மந்திரிகள் இந்த வேலைகளை தேர்தல் காலத்திலே மட்டும் செய்ததல்ல.

கடந்த ஐந்தாண்டுகாலமாகவே செய்து வருகிறார்கள். மந்திரிகள் செய்த சுற்றுப் பயண நிகழ்ச்சிகளைப் பார்த்தால் இந்த உண்மை உங்களுக்குப் புரியும்.

மந்திரிகள் சென்ற சுற்றுப் பயணத்தில், பெரும் பகுதியை எங்களது தொகுதிகளிலேதான் அதிகமாக