பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ᏙᎥᎥᎥ




நூல் முகம்

‘ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
      ஒருகாலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண்மதியும் கடந்துஅண்ட மீது போகி,
      இருவிசும்பி னூடுபோய் எழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித்
      தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
      மலர்புரையும் திருவடியே வனங்கி னேனே’

- திருமங்கையாழ்வார்


திருப்பதியில் ஏழுமலையான் திருவடிவாரத்தில் இயங்கி வரும் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் என் முயற்சியால் தமிழக அரசின் நிதி உதவியால் தொடங்கப் பெற்ற தமிழ்த் துறையின் பேராசிரியன்- துறைத் தலைவனாகப் பணியாற்றியபோது (1960-1977) 'நாலாயிரமும் நம்மாழ்வார் சமயத் தத்துவமும் என்ற தலைப்பில் என் பிஎச்.டி. பட்டத்திற்கு ஆய்ந்தபோது, திரு. புரா. புருஷோத்தம நாயுடுவின் திருவாய்மொழி - ஈட்டின் தமிழாக்கம், காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய

1. திருநெடுந் - 5