பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமியின் இறையதுபவம் 85 (8) சோறு உண்ணும்போது நீர் இல்லாமல் முடியாது; அப்படி நீர் வேறொன்றை விரும்புவதன்று. எம்பெருமானும் அப்படியே, உபயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேண்டும்; எம்பெருமான் இவற்றை விரும்பாதவன், "உன்னல்லால் யாவராலும் ஒன்றும் குறைவேண்டேன்." (9) கொள்ளும் பாத்திரங்களின் வேறுபாடின்றி நீர் தான் குறைய நில்லாது; எங்கும் நிரம்பியிருக்கும் எம்பெருமானும் 'கொள்ளக்குறைவிலன் வேண்டிற் றெல்லாம் தரும் கோதில் வள்ளல்" கொள்வார் குறையே யத்தனை ஐசுவரியமே போதும் என்பாரும் கைவல்யமே போதும் என்பாருமாகக் குறையக் கொள்வார் குற்றமேயாகும். (10) நீர் ஐவகைப்பட்டிருப்பது போல எம் பெருமானும் ஐவகைப் பட்டிருப்பன். எங்ங்னே என்னில் (i) பூமிக்குள்ளே பொதிந்துகிடக்கும் நீர், (ii) ஆவரண நீர், (iii) பாற்கடல் நீர்; (iv) பெருக்காற்று நீர்; (v) தடாகங்களில் தேங்கும் நீர் என ஐவகைப்பட்டிருக்கும். பா, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என எம்பெருமானும் ஐவகைப் பட்டிருப்பான். (ii) நீரானது பரிசுத்தமாயினும் தான் இருக்கும் இடத்துக்குத் தக்கதாய்க் கொள்ளத்தக்கதாயும் விடத்தக்க தாயும் இருக்கும். அப்படியே தேவதாந்தரங்களில் அந்தர்மியான எம்பெருமான் விடத்தக்கவனாகவும் கூராழி வெண்சங்கேந்தின எம்பெருமான் கொள்ளத் தக்கவனாகவும் விடத்தக்கவனாகவும் இருப்பது தெளிவாகும். (12) நீர் தோண்டத் தோண்டச் சுரக்கும்; கொள்ளமாளா இன்ப வெள்ளம் கோதில் தந்திடும்" (13) நீர் தனக்கொரு பயனின்றியே பிறர்க்காகவே இருக்கும்; எம்பெருமானும் அவனைச் சேர்ந்தனவாயும் அவனை அடைத்தவர்க்காகவே இருக்கும். 6. திருவாய் 5.8;3 7. மேலது 3.9:5 8. திருவாய் 4.7:2