பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் (14) நீர் தானாகப் பெய்ய வேண்டுமேயன்றி ஒருவரால் வலிந்து பெய்விக்க முடியாது. எம்பெருமான் இயல்பும் அப்படியே. (15) நீர் கடலிலிருந்து காளமேகம் வழியாக வந்தாலன்றி உயிர் வாழப் பயன்படுவதாகாது; எம்பெருமானும் சாத்திரங் களிலிருந்து ஆசாரியர் முகமாக வந்தே அடையத்தக்க வனாகின்றான். (16) வசிட்ட சண்டாள வேறுபாடின்றியே அனைவரும் ஒரு துறையிலே படிந்து குடைந்தாடலாம்படி இருக்கும் நீர்; எம்பெருமானும் நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத் தானே" என்றும், "கானமும் வானரமும் வேடும் உண்ட வேங்கடம்" என்றும் சொல்லுகிறபடியே பெரியார் சிறியார் என்னும் வேற்று மையின்றி ஒக்க அடையலாம்படி இருப்பன். (17) நீர் சிறிது துவாரம் இருப்பினும் உள்புகுந்து விடும்; எம்பெருமானுக்குச் சிறிது வியாஜமே போதும். 'திருமாலிருஞ்சோலை மலையென்றேன்; என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்' (18) தீர்த்தச் சிறப்புகளிலே நீருக்கு மகாத்மியம் அதிகம். எம்பெருமானுக்கும் கோயில், திருமலை, பெருமாள் கோயில் முதலான திருப்பதிகளிலே சிறப்புபொலியும். (19) தாபம் மிக்கவர்கள் நீரை முகத்தில் தெளித்துக் கொள்வது, முதுகில் கொட்டுவது, உள்ளில் இழிச்சுவது, படிந்து குடைந்தாடுவதுபோல் "வாக்கினால் கருமந் தன்னால், மனத்தினால் சிரத்தை தன்னால், வேட்கை மீதுர வாங்கி' விழுங்குவார்கள் எம்பெருமானையும். 9. திருவாய் 6.10:10 11. திருவாய் 10.8:1 10. நான், திருவந் 47 12. திருக்குறுந் -4