பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமியின் இறையதுபவம் 87 (20) நீரில் சிறிய கல்லும் அமிழும்; பெரிய தெப்பமும் மிதக்கும்; எம்பெருமான் பக்கலிலும் பிரமாவாய் இழந்து போதல், இடைச்சியாய்ப் பெற்றுவிடுதல் செய்யக் கானா நின்றோம். "நேரே, கடிகமலத்துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணனடிக் கமலந்தன்னை அவன்" "மருவுநின் திரு நெற்றியில் சுட்டி அசைதர மணிவாயிடை முத்தும் தருதலும், உன்றன் தாதையைப் போலும் வடிவு கண்டு கொண்டுள்ளம் குளிர விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்கும் அவ்வுரையும், திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன், தெய்வ நங்கை யசோதை பெற்றாளே' என்பன அடைவே பிரமாணம். பகவத் குணங்களில் சிறுமாமனிசர் அமிழ்தலும், "ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க்கமையில் நிற்றலும்" கொள்க. (21) நீர் வேண்டியவன் துளி நாக்கு நனைக்கக் கிடைத்தல் போதும் என்பன், "கூரார் ஆழி வெண்சங்கேந்திக் கொடியேன்பால், வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே" இங்ங்னம் சுவாமிகள் எம்பெருமானையும் மற்றவற்றையும் சேர்த்து அநுபவித்ததைப்போல் நாமும் அநுபவித்து உளம் கரைகின்றோம். 3. மேகம், உலக மேகத்தும் காரகத்தாய். காரகம் என்ற திவ்விய தேசமும் திருக்கச்சி மாநகரில் உலகளந்த பெருமாள் சந்நிதியில் உள்ளது. மேகத்தின் இயல்பு போன்ற இயல்புடையவன் வாழும் இடமாதலால் இத்தலத்திற்குக் காரகம் என்று திருநாமமாயிற்று என்பர். 13. முத்திருவந் 36 14. பெரு.திரு. 7:5 15. சிறுமாமணிசர் (திருவாய் 8.10:13) ஊன் மல்கி மோடு பருப்பார். (மேலது 3.5:7) 16. திருவாய் 6.9;1