பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் எம்பெருமானுக்கு மேகத்தோடு ஒற்றுமை பல நிலைகளால் உய்த்துணரத் தக்கது. (1) பெய்யவேண்டும் இடமளவும் சென்று பெய்யும் மேகம்; எம்பெருமான் "வந்தருளி யென்னெஞ்சிடங் கொண்ட வானவர் கொழுந்து" என்று ஆங்காங்குச் சென்று அதுக்கிரகிப்பன். (2) மின்னலுள்ள காலம் நீர் நிரம்பியிருக்கும் மேகம்; எம்பெருமானுக்கும் பிராட்டியோடு கூடியிருக்கும் காலத்தில் கிருபாரசம் மிஞ்சியிருக்கும். "இவள் சந்நிதியாலே காகம் தலை பெற்றது. அஃது இல்லாமையால் இராவணன் முடிந்தான்" என்ற முமுட்சுப்படியின் திவ்விய சூக்தியும் காண்க. (3) மொண்ட இடத்திலும் பெய்யும் மேகம்; தனக்கு உபதேசித்தவர்களுக்கும் உபதேசிக்குமவன் எம்பெருமான். வசிட்டாதிகளுக்கும் ஞானப் பிரதானம் பண்ணினான் இராமபிரான். சித்திரகூடத்தில் வசிட்டன் பெருமாளிடம் சில தரும சூக்குமங்கள் கேட்கப் பெற்றானாயிற்று. (4) பெய்யப் பெறாத காலத்திலே வறக்கும் மேகம்; நெஞ்சுலர்ந்து பேசினான்றோ எம்பெருமானும், திரெளபதிக்கு ஆபத்திலே அருகேயிருந்து உதவப்பெறாத குறைக்காக. (5) இன்ன காலத்திலே மேகம் பெய்யுமென்று அறுதியிடவல்லார் எவரும் இலர். பெய்யவேண்டிய காலத்தில் பெய்யா தொழியவும், பெய்வதற்குச் சந்தர்ப்பம் இல்லாத காலத்தில் எண்ணாததாகவும் வந்து பெய்யவும் கடவது மேகம், எம்பெருமான் படியும் அப்படியே, "வந்தாய் போல வாராதாய்! வாராதாய்போல் வருவானே", திரெளபதிக்கு ஆபத்திலே வந்து முகங்காட்டாதொழிந்தான்; 17. திருவாய் 5.7:7 19. திருவாய் 6.10:9 18. முமுட்சு - 135.