பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் (9) விராடபர்வ காலட்சேபத்துக்கு வரும் மேகம், பகவத் விஷய காலட்சேபங்களிலே வந்து நிற்பான் எம்பெருமான். பூரீ சைலேஷ தயபாத்ர (தனியன்) என்று வந்தானிறே அரங்கநாதன் பெரிய ஜீயர் கோஷ்டியிலே. (10) சுக்திகளிற் பெய்து முத்தாக்கும் மேகம்; அடியார்க்கு இன்பமாரியாகிய (திருவாய் 4.5:10) கடாட்ச தாரையும் ஆழ்வார்கள் ஆசாரியர்களிடத்தே பிரவகித்து மிக்க பயன் விளைக்குமிறே. (11) "விண்ணில மேலாப்பு விரித்தாற்போல் மேகங்கள்" இத்யாதிப்படியே தூது விடப்படும் மேகம், எம்பெருமான்றானும் "இன்னார் தூதன் என நின்றான்" (பெரி.திரு. 2.2:3); கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான். தூதனாய் மன்னவனால் சொல்லுண்டானிறே" (மேலது 11.5:7) (12) மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும்; எருக்கிலைபோல்வன வீழ்ந்தொழியும்; ஆகவே மழை சிலர்க்குத் தீங்கு, சிலர்க்கு நன்மை. எம்பெருமான் படியும் அப்படியே. "கஞ்சன் நாள் கவர் கருமுகில்; எந்தாய்" "தாயர் மகிழ ஒன்னார் தளர” இத்யாதி. (13) "எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள், மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்" என்கின்றபடியே பயிர்கள் வேறு புகலற்று எதிர்பார்க்கப் பெற்றிருக்கும் மேகம், "களைவாய் துன்பம் களையா தொழில்வாய் களைகண் மற்றிலேன்" என்று அநந்ய கதிகளால் எதிர்ப்பார்க்கப்படுகை ஒக்குமிறே. 24. நாச், திரு. 8:1 26. பெரியாழ் திரு. 1.7:11 25. பெரு.திரு. 7:10, 27. பெரு.திரு. 5:7 28. திருவாய் 5.8:3