பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் பலன்களைக் கொள்வாரும், அவனை மோட்சோபாயமாகக் கொண்டு மோட்ச புருஷார்த்தத்தைக் கொள்வாரும், அவனை 'எனக்குத் தேனே, பாலே, கன்னலே அமுதே' என்று தாமே அநுபவிப்பவர்களுமாக இருப்பார்கள். (3) இரத்தினத்தை இழந்தவன் கதறியழுவான். எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. இராம ரத்தினத்தை இழந்த பரதன் அவையில் கதறியழுதானன்றோ? "பழுதே பலபகலும் போயின என்று அஞ்சி அழுதேன்" இன்பத்தை இழந்தபாவியேன் எனதாவி நில்லாதே" "உன்னைக் காண்பான் நான் அலப்பு ஆய் ஆகாயத்தை நோக்கி யழுவன்" என்றிப்படியெல்லாமாக கதறியழுவார்கள். (4) இரத்தினமுடையவன் மார்பு நெறிப்பன். எம்பெருமானைக் கைக்கொண்டவர்களும் "எனக்கு யாரும் நிகரில்லையே" "மாறுள்ளதோ இம் மண்ணின்மிசையே" "எனக் கென்னினி வேண்டுவதே" "இல்லையெனக் கெதிரே" என்று செருக்கிப் பேசுவார்கள். (5) இரத்தினம் பெற்றுள்ளவனை உலகமெல்லாம் தொடரும். எம்பெருமானைக் கைக் கொண்டவனையும் அப்படியே. (6) இடையில் ஒரு புருஷனைக் கொண்டே இரத்தினம் வாங்கப்படும்; புருஷகாரமின்றி எம்பெருமானைப் பெற முடியாது. "வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து." (7) இரத்தினத்திற்குச் சிலசில ஆதாரங்களில் (ஆச்ரயங்களில்) மதிப்பு அதிகப்படும். எம்பெருமானுக்கும் 29. முதல். திருவந்.16 33. திருவாய். 6.4:9 30. பெரு.திரு. 7:4 34. :. 6.1:4 31. திருவாய் 5.84 35. பெருந்தொகை. 1838 32. இராமா. நூற். 47 36. திருவாய் 4.6:8