பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் பின்பற்றி - இவ்வுரையைப் படித்து - இறையநுபவம் பெறுவோம். 5. நிதி : "எய்ப்பினில் வைப்பினைக், காசினை மணியை" (பெரி.திரு. 7,10:4) என்று மங்கை மன்னன் திருக்கண்ண மங்கைத் திருமொழிப் பாசுரத்தில் பணிப்பார். அங்ங்ணமே சடகோபரும் திருக்கோளுர்பற்றிய திருவாய் மொழியில் (6-7) அத்தலத்துப் பெருமானாகிய வைத்தமா நிதியைப் பேசுவார் சடகோபர். நிதியையும் வைத்த மாநிதியையும் ஒப்பு நோக்கி நம் சுவாமிகள் அநுபவித்தவை: சுவாமிகளின் சிந்தனையோட்டம். (1) புதைத்து வைக்கப்பெறும் பொருள் நிதி' எனப்படும். தைத்ரீய உபநிடதத்தினால் எம்பெருமான் நிதியாக அறியப்பெறுபவன். நிலத்தினுள் புதைத்து வைத்து ஆளவேண்டியதாயிருக்கும் நாட்டிலுள்ள நிதி; எம்பெருமானாகிய நிதி வைத்தமாநிதி அங்ங்னமின்றி நெஞ்சிலே புதைத்து ஆளத்தக்கது. என்ற வேற்றுமை கண்டு மகிழத்தக்கது. (2) நிதியானது தன்னையடைந்தவர்களை இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது; எந்த நேரத்தில் யார் கொள்ளை கொள்வாரோ என்ற அச்சத்தால் துஞ்சாதிருப்பர் நிதியுடையார். எம்பெருமானும் அப்படியே. "கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே". காண்பதற்கு முன்பும் உறக்கம் இல்லை; கண்டாலும் காதல் மிகுதியால் உறங்குவதில்லை, நிதியானது சித்தாஞ்சனம் அணிந்த சில பாக்கியவான் களுக்கே கிடைக்கும்; எம்பெருமானும் 'பக்தி சித்தாஞ்சனம்' பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்கியசாலிகட்கே கிடைப்பன். 38. திருவிரு. 97