பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமியின் இறையதுபவம் 95 (3) நிதியுடையவன் மார்பு நெறிப்பன், எம்பெருமானைக் கைக் கொண்டவர்களும் எனக்கு ஆரும் நிகரில்லையே” 'மாறுள்ளதோ இம்மண்ணின் மிசையே'. 'இல்லையெனக் கெதிரில்லையெனக், கெதிரில்லை யெனக் கெதிரே' என்று செருக்கிப் பேசுவார்கள். நிதி படைத்துள்ளவனை உலகமெல்லாம் போற்றிப் புகழும். எம்பெருமானைக் கைக் கொண்டவர்களையும் அறிஞர் புகழ்வர். (4) நிதியை இழந்தவன் கதறியழுவன். எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. சீராமனாகிய வைத்தமாநிதியை இழந்த பரதாழ்வான் சபையில் கதறியழுதானன்றோ? "பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்" "இன்பத்தை இழந்த பாவியேன் என தாவி நில்லாதே" "எழில்கொள் நின் திருக்கண்ணின் நோக்கந்தன்னையும் இழந்தேன் இழந்தேனே" "உன்னைக் காண்பான் நான் அலம்பு ஆய் ஆகாயத்தை நோக்கி யழுவன்" "என சொல்லிப் புலம்புவனே' என்று இப்படியெல்லாம் கதறியழுவார்கள் எம்பெருமானுடைய சிந்தனையை இழந்து ஒரு கணப்பொழுது கழியப் பெற்றாலும் கள்வர் எல்லா சொத்துகளையும் கொள்ளை கொண்டால் எப்படி கதறியழக் கூடுமோ அப்படிக் கதறியழவேண்டும் என்பர். இங்ங்னம் எல்லாம் சுவாமிகளின் இறையநுபவம் யானறிந்தவரையில் விரிவாகக் காட்டப் பெற்றது. 39. இராமா. நூற். 47 43. பெரு.திரு. 7:4 40. திருவாய். 6.4:9 44. மேலது 7:7 41. பெருந்தொகை 1838. 45. திருவாய். 3.8:4 42. முதல் திருவந்: 16 46. திருவிருத். 86