பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 97 இப்படிக் கஷ்டப்படுத்துகிறானே (இறைவன்) என்றாராம். அதற்கு அவர் "நீயாள, வளையாள மாட்டோமே" என்றானன்ற றோகலியன் பாசுரம். எம்பெருமானுக்கு வாழ்க்கைப்பட்டால் கிலேசப்பட்டு தானே ஆகவேண்டும்" என்றாராம். பிறகு வெளியே எழுந்தருளிய பின் நஞ்சீயர் நம்பிள்ளையை நோக்கி பார்த்தீரா இவருடைய எண்ணத்தை? என்ன பாசுரம் எடுத்துக் காட்டினார்!" என்று அருளிச் செய்து மகிழ்ந்தாராம். (பெரி. திரு. 3.6:9 உரை காண்க). இங்கு முன் நடந்ததைப் பின்னர் சொல்வதால் ஐதிகம் ஆயிற்று. இந்த ஐதிகம் ரசோக்தியாகவும் வெளிப்படுவதுண்டு. இது பாசுரத்தின் பொருளுக்கேற்ப அமையுமாறு சொல்லப்பெறும். இத்தகைய ஐதிகங்கள் தீபிகையுரைகளில் நிறைய உள்ளன. உரையில் ஆழ்வோருக்கு இவை மிளகு மிட்டாய்' போல் இனிக்கும். இத்தகைய ஐதிகங்கள் சிலவற்றை ஈண்டுக் காண்போம். ஐதிகம் - 1 குடதிசை முடியை வைத்து (திருமாலை - 19) என்ற பாசுர உரையில் காணப் பெறுவது. "மேலைத் திக்கு - உபயவிபூதிக்கும் தலைமை வகித்தலைத் தெரிவிக்குமாறு தான் சூடின திருவபிடேகத்தையுடைய திருமுடியை வைப்பதானாலும், கீழைத்திக்கு - சகல லோகமும் உய்விக்கும்படி சரணமடையக்கூடிய தன் திருவடிகளை நீட்டுவதனாலும், வடக்குத் திக்கு - முரட்டு சமஸ்கிருதம் நடையாடுவதாகி ஆழ்வார்களின் செவிக்கினிய ஈரச் சொல் நடையாடாத தேசமாகையாலே அத்திக்கிலுள்ளா ரெல்லாரும் ஈடேறுவதற்கு ஏற்பட வேண்டிய பின்னழகை யெல்லாம் காட்டுவதனாலும், தெற்குத் திக்கு - தனது அந்தரங்க பக்தனான விபீஷணாழ்வானுக்காகத் தனது இரு கண்களை வைத்து அன்போடு நோக்குவதனாலும் என இவ்வாறு நான்கு திக்குகளும் பயன்படும் என்க. விபீஷணாழ்வான் சிரஞ்சீவியாய் என்றும் இலங்கையில் வாழ்ந்து வருகின்றான் என்பது நூற்கொள்கை.