பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் ஐதிகம் - 2 : அமலனாதி பிரான் (1) - இதன் உரையில் : பிள்ளை திருநறையூர் அரையரைச் சிலர் "பெரிய பெருமாளை அநுபவிக்க இருந்த இந்த ஆழ்வார் (திருப்பாணாழ்வார்) திருவேங்கடமுடையான் பக்கம் போவானேன்?" என்று கேட்க, "ஆற்றிலே அழுந்துகிறவன் ஒரு காலைத் தரையில் ஊன்றினால் பிழைக்கலாமோ என்று காலந் தாழ்க்குமாப்போலே, இவரும் பெரிய பெருமாள் அழகிலே அழுந்துகிறவராகையாலே திருமலையில் கால் தாழ்ந்தார்" என்றாராம். "ஒருவனைக் கவி பாடும்போது அவனுடைய வரலாறு சொல்லிக் கவி பாடவேணும்; பரமபதத்தில் நின்றும், வடமதுரையிலே தங்கித் திருவாய்ப் பாடிக்கு வந்தாப்போலே வைகுண்டத்தில் நின்றும் திருமலையிலே தங்கியாய்த்துக் கோயிலுக்கு வந்தது; அவ்வரலாற்றைப் பாடுகிறபடி” என்றும் ஒரு கால் அருளிச் செய்தாராம். ஐதிகம் - 3 : 'கொண்டல்வண்ணனை (அமலனாதி - 10) என்பதன் உரையில் வருவது. கூரத்தாழ்வான் தம் சுந்தர பாஹ-ஸ்வத்தில் பண்டு யசோதைப் பிராட்டி முத்தங்கொடுத்த சுவடு இன்றும் அழகர் திவ்விய கன்னங்களில் திகழாநிற்கும் என்று அநுபவித்தாற் போல, இவரும் (திருப்பாணாழ்வார்) பண்டு வெண்ணெய் உண்ட முடைநாற்றம் இன்னும் பெரிய பெருமாள் திருப்பவளத்திலே கமழா நிற்பதாகக் கருதி அநுபவிக்கிறார் - வெண்ணெய் உண்டவாயன்' என்று தசரத சக்கரவர்த்தி தன்னுடைய அரசு ஐசுவர்யத்தைப் புசிக்கைக்கு எனக்கு ஒரு பிள்ளை வேணும் என்று நோன்பு நோற்றுப் பெருமாளைப் (இராமனைப்) பெற்றதைப் போல நந்தகோபரும் "கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன்" என்றபடியே திருவாய்ப்பாடியில் பால் முதலானவற்றின் நிறைவு