பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1OO காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் (அ) நஞ்சீயர் சந்நியாச்ரமத்தை மேற்கொண்ட நிலையில் திரிதண்டம் (முக்கோல்) தரித்துக் கொள்ளும் போது 'ஓ திரிதண்டமே! நீ எனக்குத் துணையாயிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொருளையுடைய மந்திரத்தை (ஸ்கர மா கோபாய) உச்சரிக்க வேண்டும் என்று கேட்டு "எல்லாவற்றையும் அறிய வல்லவரையும் முழு ஆற்றலையுடையவரையும் உள்ள எம்பெருமானையே துணையாகப் பற்ற வேண்டியிருக்க, அசேதநமான தண்டத்தை நோக்கி இங்ங்ணம் சொல்லும்படியாக நேர்ந்ததே" என்று சாதித்தாராம். சாத்திரவிதிப்படி கோலைத் துணை கொள்ள வேண்டியது அங்கு; கிழத்தனத்தில் கோலைத் துணை கொள்வது ஆற்றலற்றமையினாலே இங்கு. (ஆ) இன்னுமோர் ஐதிகம் : நஞ்சீயர் பட்டர் திருவடிகளுக்கு அந்தரங்கராய் இருக்கிற நாளிலே ஒரு கைசிக துவாதசியன்று பட்டர் பிரம்ம ரதத்தில் எழுந்தருளித் திருவீதி அலங்கரிக்கப்பட்டவாறே நஞ்சீயரும் ரீபாதம் தாங்கப்புக, உத்தமாச்ரமியாய் திரிதண்டதாரியான உமக்கு இக்காரியம் தகாது' என்று பட்டர் முதலானோர் மறுத்துக் கூற, நஞ்சீயர் "எனக்குத் துணையாகி என்னை இரட்சிக்க வேண்டும்" என்ற மந்திரத்தைச் சொல்லி ஏற்றுக் கொண்ட இந்த முக்கோல்தானே இன்று எனக்கு விரோதியாகின்றதோ? இக்கோல் எனக்குத் துணையல்லவோ? சொரூப ரட்சணத்துக்கு இக்கோல் இடையூராயின் இஃது எனக்கு வேண்டா" என்று சொல்லித் திரிதண்டத்தை விட்டெறியப் போனாராம். அப்போது அவருடைய ஆசாரிய பக்தியைக் கண்டு அனைவரும் வியந்தனராம். ஐதிகம் - 5 : 'ஓதலும் உன் பேரன்றி மற்றோதாள்' (பெரி.திரு. 2.7:5) இந்தப் பாசுரத்தின் (இது தாய்ப் பாசுரம்) இக் காட்டிய அடிக்கு ஓர் ஐதிகம். திருவாய்ப்பாடியில் கண்ணன் பிறந்து வளரும் காலத்தில் ஓர் ஆய மங்கை