பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 1 O1 இடைவிடாது கண்ணபிரானையே சிந்தித்துக் கொண்டு வியாமோகம் அடைந்திருந்தாள்; அதுகண்ட அவன் மாமியானவள் அந்த சிந்தனையை மாற்றிவிடக் கருதி, தயிர் பால் நெய் முதலியவற்றை அவளிடம் கொடுத்து இவற்றை விற்று வா’ என்று சொல்லியனுப்பினான். அம் மங்கை கண்ணபிரானையன்றி வேறொன்றையும் அறியாத வளாகையாலே, மாமியின் நிர்ப்பந்தத்துக்காகக் கூடையைத் தலையிலே சுமந்து கொண்டு, தெருவழியே நடந்து செல்லும்போது, தயிர்! பால் நெய்' என்று விற்பது தவிர்த்து "கோவிந்த வாங்கலையோ கோவிந்தன்! தாமோதரன் வாங்கலையோ தாமோதரன்! மாதவன் வாங்கலையோ மாதவன்!" என்று இங்ங்னே கண்ணனின் திருநாமங்களையே கூவிக் கொண்டு சென்றாளாம். அது போலவே இப் பரகாலநாயகியும் 'ஓதிலும் உன்பேரன்றி மற்றோதாள்’ என்றவளாக உள்ளாள். ஐதிகம் - 6 : 'வாதமாமகள் (பெரிதிரு. 5.8:2) என்ற திருமொழிப் பாசுரத்தின் கோதில் வாய்மையி னாயொடும் உடனே உண்பன் நான் என்ற அடிக்கு ஓர் ஐதிகம். முன்பெல்லாம் வாழை இலையில் தாமரை இலையில் உள்ளது போலவே இடை நரம்பு இல்லாமல் இருந்த தென்றும், இப்பொழுது இராமன் அநுமனைத் தன் எதிரில் அமரச் செய்து தனது இலையில் ஒரு பாதியிலேயே அவன் உண்ணுமாறு அவ்விலை நடுவில் தனது கையால் ஒருவரையறை கீறினானாக, அதுமுதல் சங்கற்பத்தால் அவ்விலையில் இடை நரம்பு ஏற்பட்டதென்றும் கூறுவர். இராமபிரான் ஒக்க உண்ட செய்தி வாலிஷ்ட இராமாயணத்தில் உளளது எனபா. ஐதிகம் - 7 : பண்டை நாளாலே (திருவாய். 9.2:1) என்ற திருவாய்மொழியின் உரையில் இரண்டு ஐதிகங்கள் காட்டப் பெறுகின்றன.