பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 105 அரையர் கோட்டியிலே சேர்ந்த அவர் சேவிக்கும் திருப்பாசுரங்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார். அரையர் கடுவினை களையலாகும் என்கின்ற இந்தப் பாசுர அளவிலே வரும்போது, எழிலனி அனந்தபுரம் படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் கான நடமினோநமர்கள் உள்ளிர்! நாம்உமக் கறியச் சொன்னோம் என்ற அடிகளைச் சேவிக்கும்போது, ஆளவந்தார் திருமுகத்தைப் பார்த்து ஊன்றி உறுத்திச் சேவிக்க, ஆளவந்தாரும் இதைக் கேட்டு ஆழ்வாருடைய தமர்களிலே தாம் சேரவேண்டில் திருவனந்தபுரம் சென்று சேவித்து வரப் பிராப்தம்' என்று சொல்லிக் கொண்டே அப்போதே பூரீபாதத்தை உடையாரைக் கொண்டு நம்பெருமாளிடம் விடைபெற்றுப் பயணமாகித் திருவனந்தபுரத்திற்கு எழுந்தருளி அனந்தபத்மநாபனை மங்களாசாசனம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் குருகைக் காவலப்பன் எழுதித் தந்த சிறு முறியைப் பார்க்க நேர்ந்த அந்நாளே அவர் குறிப்பிட்ட நாளாக இருந்தது. உடனே துணுக்குற்று அலைந்து ஐயோ, நாம் நினைத்தவுடன் எங்கும் சென்று சேரும் ஆற்றலுடைய பெரிய திருவடியும் அல்லோம்; சிறிய திருவடியும் அல்லோம். அங்குச் சென்று சேர்வதற்கு ஒரு புட்கவிமானம் பெற்றிலோமே என்று சோகித்து எழுந்தருளியிருந்தார். 5. அடியேனுக்கு அனந்தசயனத்தின்மீது தனிப் பிரீதி - 1948 முதன் முதலில் சேவித்தேன். அதன் பிறகு பல முறை சேவிக்கும் பேற்றைப் பல்கலைகக் கழகம் ஏற்படுத்தித் தந்தது. இறுதியாக ரெட்டியார் மாநாடு அந்த வாய்ப்பை (4 ஆண்டுகட்கு முன்னர்) நல்கியது.