பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O6 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் இங்கே ஈட்டு ரீசூக்தி : "திருவத்யயனம் பாடாநிற்க இதைக் கேட்டருளி ஆளவந்தார் நமக்கு ஆழ்வாரோடே ஒரு சம்பந்தம் உண்டாக வேணும் என்று அப்போதே ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு எழுந்தருளினார்" (அனந்தபுரத்துக்கு) ஐதிகம் - 12 : "வானேற வழி தந்த வாட்டற்றான் பணிவகையே" (திருவாய். 10.6:5) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே (இறுதி அடி) என்பதற்கு ஐதிகம். பரமபதம் கிட்டிற்று என்னாக் கடுகக் கால்வாங்கிப் போகப் பாராதே காண் பல நாட்கள் நம்மைக் குடிமக்கள் ஆக்கி எளி வரவு படுத்தின இவ்வுலக வாழ்க்கையைப் (சம்சாரத்தைப்) புரிந்து புரிந்து பார்த்துச் சிரி; 'உன்னை அடியறுத்தோமே! (உன்னை வென்றோமோ) என்று பார்த்துச் சிரி" என்கின்றார். பின்பழகிய மணவாளப் பெருமாள் அரையர் ஒரு நோயால் வருந்தாநிற்க. திருவரங்கநாதன் அவருக்குப் பரமபதம் கொடுக்கத் திருவுள்ளம்பற்றித் திருமாலை, திருப்பரி வட்டம் முதலான வரிசைகளைக் கைவிட்டருளின அளவிலே, 'நானேறப் பெறுகின்றேன். நரகத்தை நகு நெஞ்சே என்று இப்பாசுரத்தைச் சொல்லிக் கிரந்தியை (கட்டியைப்) பார்த்துச் சிரித்தாராம். நரகத்தை நகு என்ற இவ்விடத்திற்கு நரகலோகத்தைப் பார்த்துச் சிரி என்று சிலர் பொருள் கூறுவர். அது வேண்டா; சம்சாரத்திற்கு நரகம் என்ற பெயராதலால் 'சம்சார பூமி என்ற பொருளே ஈண்டுக் கொள்ளத்தகும். 2. இதிகாசங்கள் இதிகாசம் என்பது ஒரு வரலாறு, அல்லது கதை போல் வருவது. (எ-டு) தேனுகன் ஆவி போயுக (பெரிதிரு. 9.8:7) என்ற திருமொழியில் உள்ளது. கம்சனது ஏவுதலால் கழுதை வடிவம்கொண்டு காட்டுக்குள்ளே