பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 1O7 கண்ணபிரானை நலிவதற்காக வந்தவன் தேனுகன் என்னும் அசுரன். கண்ணபிரான் பலராமனோடும் இடைச் சிறுவர் களோடும் மாடு மேய்த்துக் கொண்டு, பழங்கள் அழகாக மிகுதியாகப் பழுத்து மணம் வீசிக் கொண்டிருந்த ஒரு பனங்காட்டை அடைந்து அப்பழங்களை விரும்பி உதிர்த்துக் கொண்டு வருகையில் அவ்வனத்துக்குத் தலைவனும் கம்சன் பரிவாரத்தில் ஒருவனுமான கழுதை வடிவங் கொண்ட தேனுகாசுரன் சினம் கொண்டு ஓடிவந்து எதிர்த்துப் போர் செய்ய உடனே கண்ணன் அதிலாவகமாக அதன் பின்னங்கால்கள் இரண்டையும் பற்றி அவ்வசுரக் கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படிப் பனை மரத்தின் மேலெறிந்து அழித்தனன் என்பது வரலாறு. இத்தகைய பல இதிகாசங்கள் தீபிகையை அழகு செய்கின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம். இதிகாசம் - 1 : துப்புடையார்கள்தம் (பெரியாழ். திரு.1.6:7) என்ற பெரியழ்வார் திருமொழிப் பாசுரத்தில் 'தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவி தாயொடு கூட்டிய (3-வது அடி) என்பதில் உள்ளது. ஒரு வைதிக அந்தணனுக்கு நான்கு குமாரர்கள். முதற்பிள்ளை பிறந்து பூமியைத் தொட்டதும் காணப் பெறவில்லை. இரண்டாவது மூன்றாவது பிள்ளைகளின் நிலைமைகளும் அப்படியே. பெற்றவளும் கூட முகத்தில் விழிக்கப்பெறாதபடி இன்னவிடத்தில் போயிற்றென்று தெரியாமல் காணவொண்ணாது மூன்று பிள்ளைகளும் போய்விடுகையாலே நான்காவது பிள்ளையைக் கருவுயிர்க்கப் போகும் தருணத்தில் அந்த அந்தணன் கண்ணபிரானிடம் வந்து இந்த ஒரு பிள்ளையையாயினும் பாதுகாத்துத் தந்தருள வேண்டும் என்று வேண்டினான். அதற்குக் கண்ணபிரான் அப்படியே செய்வதாக வாக்கு தந்தான். ஆனால் அன்று ஒரு வேள்வியில் தீட்சிதனாக இருக்க வேண்டியிருந்ததால் கருவுயிர்க்கும் இடத்திற்கு