பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 109 இதிகாசம் - 2 : "சீமாலிகன் அவனோடு தோழமை கொள்ளவும்” (பெரியாழ்.திரு.2.7:8) என்ற திருமொழி உரையில் வருவது. சீமாலிகன் என்பான் கண்ணபிரானின் உயிர்த் தோழன். மேன்மைப் பொருளைத் தரும் ரீ' என்ற சொல் 'சீ' எனத் திரிந்து வந்து சீமாலிகன் என்று அவன் பெயரோடு அமைந்து கிடக்கின்றது. இவன் கண்ணபிரானிடம் பலவிதமான ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றவன்; ஒருவர்க்கும் அஞ்சாமல் சாது சனங்களை இம்சித்துக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட கண்ணன் மிகவும் வருந்தி நண்பனாகிய இவனைக் கொல்வது தகாது; ஏதாவது செய்தாக வேண்டும் என்று வருந்தி, ஒரு நாள் 'நீ இப்படிச் செய்வது தகாது' என்று அறிவுரை வழங்கினான். அசுர இயல்புள்ள அந்த மாலிகனும் தன் வாயில் வந்தபடி பிதற்றி, "நீ எல்லா ஆயுதங்களைக் கையாளும் முறையைக் கற்பித்தாய்; திருவாழிப் பயிற்சியை மட்டிலும் கற்பித்தாய் இல்லை என்று கண்ணபிரான்மீது குறை கூறினான். கண்ணனும் இதில் பழகுவது உனக்கு முடியாது; எனக்கே அசாதரமானது' என்று சொல்ல, அவனும் என்னால் முடியாதது ஒன்று உண்டோ? நீ அவசியம் அந்தப் பயிற்சியைக் கற்பித்தேயாகவேண்டும் என நிர்ப்பந்தித்தான். கண்ணன் அவனை யொழிக்க இதுதான் தக்க சமயம்' என்று திருவுள்ளம் கொண்டான். சக்கரப் படையை எடுத்துத் தன் ஒற்றை விரலால் சுழற்றி மேலேயெறிந்து கையிலேற்றிக் காட்டினான் கண்ணன். இஃது எனக்கு அரிதாமோ? என மாலிகன் சொல்ல, ஆம்; உனக்கு அரிதேயாகும் என்று கண்ணன் வற்புறுத்திச் சொல்லவும் அதனை அவன் கேளாமல் அத்திருவாழியை வாங்கிச் சுழற்றியெறிந்துப் பிடிப்பதாக நினைத்துத் தன் கை விரலைக் கழுத்துக்கு அடுத்து வைத்துக் கொண்டு நின்றான். அப்போது அத்திருவாழி சுழன்று வருவதற்கு இடம் போதாமையால் அதன் வீச்சு இவன் கையில்