பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் முனிவர் அக்குளக்கரையின் மீதிருந்த ஒரு மரத்து நிழலில் அமர்ந்து இளைப்பாறினார். கத்திரபந்து அவரது காலைப் பிடித்து அமுக்கி நோவு தீர உபசாரங்களையுப் புரிந்தான். முனிவர் அவனுடைய வரலாற்றைக் கேட்க அவனும் தான் சூரிய மரபில் வந்த விசுவதரன் என்பவருக்கு மகனாயப் பிறந்தவன் என்று தொடங்கித் தம்முடைய பாவச் செயல்கள் ஒன்றும் ஒளிக்காமல் அவரிடம் உரைப்பா னாயினன். இவற்றைச் செவியுற்ற முனிவரும் அவனைத் நல்வழிப்படுத்த எண்ணி அவனுடைய தீச்செயல்களை விட்டொழித்து ஆருயிர்களிடம் அன்பு காட்டுமாறு பணித்தார். இவனும், தான் தீய குணங்கட்குப் பிறப்பிடமானவன் என்றும், இது தவிர வேறு நியமனம் பணிக்கப் பெற்றால் அதனைச் சிரமேற் கொள்ளக் காத்திருப்பதாகவும் கூறினான். எப்படியாவது இவளை உய்விக்கப் பேரவாக் கொண்ட முனிவரும், கோவிந்த், கோவிந்த்' என்று சொல்லிக் கொண்டிருந்தால் அஃது அவனுக்கு நன்மை பயக்கும் என்று உரைத்துப் போயினார். அது முதலாக கத்திரபந்துவும் அத்திருநாமத்தை இடைவிடாது சொல்லிக் கொண்டு காலத்தைப் போக்கினான். சில ஆண்டுகள் கழித்து அவன் காலகதி அடைந்தான். பின் அந்தணர் குலத்தில் முற்பிறப்பு உணர்வுடன் பிறந்தான். அவனுக்குக் கொடிய சம்சாரத்தில் வெறுப்பு உண்டாயிற்று. தனக்கு இவ்வுயர் குலத்தில் பிறவி நேர்ந்ததும், முற்பிறப்பின் நினைவு ஏற்பட்டதும் முன்பு பண்ணின கோவிந்த நாம சங்கீர்த்தனத்தின் பயன் என்பதை உணர்வானாயினான். அந்தக் கோவிந்தனையே ஆராதனம் செய்து தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் 6. மூன்றெழுத்துடைய பேரால் - இன்ன திருநாமம் என்னாதே இரகசியமாய்ச் சொல்லிற்று - ருசி பிறந்த பின்பு அந்தத் திருநாமம் என்ன? என்று விரும்பிக் கேட்டால் அப்போதைக்கு உபதேசிப்போம் என்றாம். மூன்றெழுத்தனை மூன்றெழுத்ததனால் என்று பெரியாழ்வார் மறைத்தாற் போல (பெரியாழ்.திரு. 4.7:10)