பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் இப்படிப் பட்ட திருநாமம் இவ்வளவு பெருமையுடையது என்பது இவன் வரலாற்றால் வலியுறுத்தப்பெற்றது. இதிகாசம் - 6 : "குரங்குகள் மலையைத் துக்க' (திருமாலை - 19) என்ற பாசுரத்தின் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடி, தரங்கநீர் அடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன் (முதல் இரண்டடி) என்பதன் உரையில் வருவது. இந்த இதிகாசம். இராமாவதாரத்தில் பெருமாள்' இலங்கை நகர் எழுந்தருள்வதற்காகக் கடலில் அணைகட்ட நேர்ந்தது. அப்போது வானர வீரர்கள் மலைகளை உருட்டிக் கொண்டு வந்து கடலைத் துர்த்தனர். இதனைக் கண்ணுற்ற அணிற் பிள்ளைகள் "இந்த வானரங்கள் தமது ஆற்றலும் கேற்றவாறு ஏதோ காரியங்களைச் செய்யும்போது நாமும் நமது ஆற்றலுக்கேற்றவாறு இப்பெரிய காரியத்தில் ஒன்றைச் செய்வோம்” என்று தீர்மானிக்கின்றன. உடனே எல்லா அணில்களும் கடலில் மூழ்குதல், அந்த ஈர உடம்புடன் கரையிலுள்ள உலர்ந்த மணலில் புரளுதல் உடலில் ஒட்டிக் கொள்ளும் மணலைக் கடலில் கொண்டு உதறுதல் - என்று காரியங்களைச் செய்து சேது கட்டும் செயலுக்கு உதவி புரிந்தன. இதனை ஆழ்வார் அருளிச் செய்கின்றார். இதிகாசம் - 7 : "அக்கும் புலியின் அதளும்" (பெரி.திரு.9.6:1) என்ற திருமங்கையாழ்வார் பாசுரத்தின் உரையில் கண்டது இந்த இதிகாசம். ஒரு காலத்தில் சிவ பெருமான் தன்னை மதியாத தாருகவனத்து முனிவர்களுடைய கருவத்தைப் பங்கம் செய்யவும் அவர்கள் மனைவிமார்களின் கற்பு நிலையைச் சோதிக்கவும் கருதித் தான் ஒரு விட வடிவங்கொண்டு அவர் இல்லந்தோரும் சென்று பிச்சை 7. பெருமாள் - இராமன்; இளைய பெருமாள் - இலக்குவன்; பெரிய பெருமாள் - அரங்கத்தில் அறிதுயில் கொள்ளும பெருமாள், பெத்த பெருமாள் (தெலுங்கு)