பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 115 கேட்கும் நிலையில் தன்னை நோக்கிக் காதல் கொண்ட அம்முனி பத்தினிமாரின் கற்பு நிலையைக் கெடச் செய்ய, அது கண்டு பொறாமல் சீற்றங் கொண்டு அம்முனிவர்கள் அபிசாரயாகமொன்று இயற்றி . அவ்வோமத் தீயினின்று எழுந்த நாகங்கள், பூதங்கள், மான், புலி, சிங்கம், முயலகன், வெண்டலை முதலியவற்றைச் சிவனைக் கொன்று வரும்படி ஏவ, சிவபெருமான் தன்மீது பொங்கி வந்த நாகங்களை ஆபரணங்களாகத் தரித்துக் கொண்டான், பூதங்களைக் கணங்களாக்கிக் கொண்டான். மானைக் கையிலேந்திக் கொண்டான். புலித்தோலை உரித்துத் தன் ஆடையாகத் தரித்துக் கொண்டான்; சிங்கத்தை அம்பிகைக்கு வாகனமாக்கினான்; முயலகனை முதுகிற் காலால் ஊன்றி, வெண்டலையைக் கையால் பற்றிச் சிரமேல் அணிந்து இங்ங்ணம் அவற்றையெல்லாம் பயனிலவாகச் செய்து விட்டனன் என்பது வரலாறு." இதிகாசம் - 8 : புரங்கள் முன்றுமோர் (பெரிதிரு.10.2:9) என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தில், புரங்கள் மூன்றும் பொங்கெரிக்கிரை கண்ட (முதல் அடி) என்பதில் உள்ள இதிகாசம்': முற்காலத்தில் தாரகாசுரனுடைய புதல்வர்களான வித்யுத்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்னும் மூவரும் மிக்க தவம் செய்து பிரமணிடம் பெரு வரம் பெற்று வானத்துப் பறந்து செல்லும் தன்மை வாய்ந்த மூன்று பட்டணங்களை அடைந்தனர். மற்றும் பல அசுரர்களோடு அந்நகரங்களுடனே தாம் நினைத்த விடங்களில் பறந்து சென்று பல இடங்களில் மேலும் இருந்து அவ்விடங்களைப் பாழாக்கி வந்தனர். இத் துன்பத்தை பொறுக்கமாட்டாத தேவர், முனிவர் முதலானவருடைய வேண்டுகோளினால் 8. இந்த வரலாறு கந்தபுராணத்திலும் உள்ளது. இதனைக் கொண்டு, பயங்கர அழிவைத் தரும் அணு ஆற்றலை, வாழ்க்கையில் பயனுள்ள வகையில் எப்படிப் பயன் படுத்தலாம் என்று நான் எழுதிய 'அனுவின் ஆக்கம் என்ற நூலில் பயன்படுத்திக் கொண்டேன்.