பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 117 கொண்டிருந்தான். அதே சமயம் சூரிய பகவானும் எங்கும் சுற்றித் திரிந்து இந்த அழகி நிற்குமிடத்திற்கே வரலாயினன். இந்த இரண்டு தேவர்களும் அந்தப் பெண்மணியை ஒரே காலத்தில் கண்ணுற்றுக் காமப் பரவசர்களாகி மெய்மறந்து கலங்கி நின்றனர். உடனே இந்திரனது விந்து வெளிப்பட, அதனை அவன் அவளது தலையில் விழுமாறு செய்தனன். அஃது அவ்வாறு முடிமீது விழாது, வாலில் வீழ்ந்தது. தேவர்களின் விந்து ஒருபொழுதும் வீணாவதில்லை யாதலின், உடனே அது மிக்க பலசாலியான ஒருவானரமாக மாறியது. வாலினிறு தோன்றிய காரணத்தால் அது வாலி என்று பெயர் பெற்றது. ஆதித்தனும் அவ்வாறே அனங்கனுக்கு வசமாகித் தன் விந்துவை அவளது கழுத்தில் வீழ்த்தினான். கரீவையில் (கழுத்தில்) வீழ்ந்த அவ்விந்து சுக்கிரீவன் எனப் பெயர் பெற்று வானரமாகிவிட்டது. இந்த வரலாறு உத்தர இராமாயணத்தில் விரிவாகக் கூறப்பெற்றுள்ளது. இதிகாசம்-10 : வார்புனல் அந்தநண் அருவி' (திருவாய்.3.5:8) என்ற திருவாய்மொழிப் பாசுர ஈட்டு உரையில் 'மிளகாழ்வான் வார்த்தை என்று வருகின்று. அஃது ஒர் இதிகாசம் தருகின்றது. அரசன் ஒருவன் பல பேர்களுக்குக் கிராம பூமிதானம் செய்வதாக மிளகாழ்வான் கேள்வியுறுகின்றான். இவனும் தானம் பெறச் செல்லு கின்றான். அவனைப் பார்த்து அரசன் "உனக்குத் தானம் கொடுப்பதில்லை" என்று சொல்ல, அது கேட்ட மிளகாழ்வான், "பிரபுவே, எனக்கு மாத்திரம் கொடுக்க முடியாதென்கைக்குக் காரணம் என்ன? வேதமோ சாத்திரமோ எதில் தேர்வு வைத்தாலும் நான் தேர்வு கொடுக்கத் தயாராக இருக்கின்றேன்" என்கின்றான். இதனைச் செவிமடுத்த அரசன் "உனக்கு அந்த யோக்யதைகள் இல்லை என்று நான் சொல்லவில்லை" என்கின்றான். உடனே மிளகாழ்வான் "ஆனால், ஏன் தானம் கொடுக்கமாட்டேன் என்கின்றாய்?" என்று கேட்க, அரசன், "நீர் பூரீ வைஷ்ணவனாகையாலே