பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் உனக்குக் கொடுக்க விரும்புகின்றிலேன்" என்று மறுமொழி தருகின்றான். உடனே மிளகாழ்வான் பரமானந்தம் அடைந்து கூத்தாடுகின்றான். வைணவத்துவம் ஏதுவாக அந்த அவைணவன் கைவிட்டது தானே தமக்குப் பரமபுருஷார்த்தமாயிருந்ததாகக் கருதுகின்றான். பிறர் கூற' (2வது அடி) என்ற சொற்றொடரின் அழுத்தம்தான் இந்த இதிகாசத்திற்குக் காரணம் என்பது கருத்து. இதிகாசம்-11 : "உறுமோ பாவியேனுக்கு" (திருவாய் 8.10:3) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் 'அவனடியார் சிறுமாமனிசராய் என்னையாண்டார் (3,4 அடிகள்) என்ற அடிகளில் 'சிறுமாமணிசர் என்பதற்கு பட்டர் அருளிய இதிகாசம். பட்டர் சிறுவனாக இருந்தபொழுது ஒருநாள் அவர் தந்தை (கூரத்தாழ்வான்) திருவாய்மொழி அநுசந்திக்கும் போது இப்பாசுரத்தில் வரும் சிறுமாமனிசராய்' என்ற சொற்றொடரைக் கேட்டு சிறுமாமனிசர் என்றால் சிறியராயும் பெரியராயும் உள்ள மனிசர் என்பது பொருளல்லவா? ஒன்றுக்கொன்று எதிர்த்தட்டான சிறுமை பெருமை என்கின்ற குணங்கள் இரண்டும் ஒரு பொருளினிடத்து ஒன்று சேர்ந்திருக்குமோ? ஆழ்வார் சிறு மாமனிசர் என்று இரண்டையும் ஒரிடத்தே அருளிச் செய்தது பொருத்துவது எங்ங்ணம்? என்று தமது திருத்தந்தையாரை வினவா நின்றார். அதற்கு ஆழ்வான் ஆலோசித்து "பிள்ளாய்! நன்கு வினவினாய்; உனக்கு உபநயனம் ஆகாமையால் இப்போது வேத சாத்திரங்களைக் கொண்டு விடைசொல்லலாகாது; ஆயினும் பிரத்தியட்சத்தில் காட்டுகின்றோம் காண்” என்று சொல்லிச் சில பெரியோர்களைக் காட்டி, திருமேனி சிறுத்து ஞானம் பெருத்திருக்கின்ற சிறியாச்சான் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் போல்வாரைச் சிறுமாமனிசர் என்னத் தட்டில்லையே; முதலியாண்டான், எம்பார் முதலிய பெரியோர்கள் உலகத்தாரோ டொக்க அன்னபானாதிகளைக்