பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 125 சத்தை அவனென்றிருக்கிறாள் காணும்' என்பது வியாக்கியான பூநீசூக்தி:இவ்விடத்தில் நஞ்சியருக்கும் நம்பிள்ளைக்கும் ஒரு சம்வாதம் உண்டு. நம்பிள்ளை: 'மாயாவியான இராவணன், இராமன் தலையறுப்புண்டு முடிந்தான்" என்று தோற்றும்படி ஒரு மாயத் தலையைக் கொண்டு பிராட்டிக்குக் காட்டினான்." அப்போது பிராட்டி இக்காலத்துப் பெண்டிர்கள் தமது கணவன்மார்களினுடைய இறப்பில் சற்றுக் கண்ணி பெருக்கவிட்டுக் கிடப்பதுபோல் சிறிது துக்கப்பட்டு உயிர் தரித்தாளேயன்றி காட்சியைக் கண்ட அந்தக் கணமே உயிர்போகப் பெற்றிலள். மெய்யான அன்பு இருக்குமாகில் அந்தச் சமயத்தில் கூடவா உயிர் பிரியாமல் இருக்கும்? உயிருக்குயிரான நாயகன் உயிர் இழந்தான் என்ற தலையைக் கண்டும் நம்பின பிறகும் அவர் தரித்திருப்பது பிலாக்கணம் (ஒப்பாரி வைத்துப் புலம்புதல்) பாடியழுதாள். அவள் இராமன்மீது கொண்டிருந்த அன்புக்கும் இப்படி யிருத்தற்கும் ஒரு தொடர்பும் இல்லைபோல் உள்ளதே" என விண்ணப்பம் செய்தார். நஞ்சியர்: "வாரீர், நீர் கேட்டது அழகிதே நாயகன் உயிரோடு உள்ளான்' என்று நினைத்துக் கொண்டால் உத்தம நாயகி உயிர் தரிப்பாள் என்றும், நாயகி இறந்து போனான் என்று நினைத்துக் கொண்டால் அவள் உயிர் விட வேண்டும் என்றும் நீர் கருதியுள்ளிர் போலும், நாயகி உயிர் தரித்திருப்பதற்கும் உயிர் விடுவதற்கும் நாயகனுடைய பிழைத்திருத்தல், மரணித்தல் தெரிந்து கொள்வது காரணம் அன்று காணும்; பிறநாடு சென்ற நாயகன் வழி நடுவே இறந்து போனானாகில் இந்தச் செய்தியை ஊரிலுள்ள நாயகி தெரிந்து கொள்ள முடியாததால், 'நமது நாயகன் உயிரோடுதான் உள்ளான் என்று மயங்கியிருக்கும்போது 12. இது வால்மிகி இராமாயணத்தில் வரும் நிகழ்ச்சி,