பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் சம்வாதம் - 3: நாளுநின் நடுநம பழமை (திருவாய் 1.3:8) என்ற திருவாய்மொழிப் பாசுர உரையில் வருவது: "நாளு நந்திருவுடை அடிகள்தம் நலங்கழல் வணங்கி (3வது அடி) என்பதற்கு நம்பிள்ளை ஒரு சம்வாதம் அருளிச் செய்கின்றார். அதாவது சர்வேசுவரனை அடைந்தானாகில் அவன் பலனைக் கொடுக்கின்றான்; பிராட்டியைத் துணையாய்ப் பற்ற வேண்டுவது என் என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, 'அவனையடையும் இடத்தில், இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்ற வேண்டும்” என்று கூறி "நாளும்நம் திருவுடை அடிகள் நம் நலங்கழல் வணங்கி” என்னா நின்றது கண்டீரே" என்று அருளிச் செய்தார் பட்டர். சம்வாதம் -4 சிக்கெனச் சிறிதோர் இடமும் (திருவாய் 2.6:2) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் 'எங்கும் பக்க நோக்கறியான் (ஈற்றடியில் வருவது) என்ற விடத்து ஈட்டில் ஓர் ஐதிக உரையாடல்: மணக்கால் நம்பி ஆள வந்தாரைச் சிறந்த கடைக்கண் நோக்கால் ஆட்கொண்ட பிறகு ஒருநாள் "குருகைக் காவலப்பனிடத்தில் ஒரு யோக ரகசியம் உண்டு" என்று ஆளவந்தாருக்குத் தெரிவித்தார். அந்த இரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேரவா எழுந்தது ஆளவந்தாரிடம். உடனே காவலப்பன் எழுந்தருளியிருந்த கங்கை கொண்ட சோழபுரத்திற்குச் சென்றார். அப்போது காவலப்பன் ஒரு குட்டிச் சுவரில் யோகத்தில் எழுந்தருளியிருந்தார். அவரது சமாதி நிலைக்கு ஊறு விளைவிக்க வொண்ணாது என்று எண்ணிய ஆளவந்தார் அவருக்கு இப்பால் நின்றார். யோக நிலையில் இருந்த அப்பனும் திரும்பிப் பார்த்து "இங்குச்