பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 129 சொட்டைக்குலத்தார்" யாரேனும் வந்தாருண்டோ?” என்று வினவினார். உடனே ஆளவந்தார் "அடியேன்” என்று எழுந்தருளி வந்து காண்கின்றார்; தண்டம் சமர்ப்பிக்கின்றார். "அடியேன் இங்கு வந்து தேவரீருக்குத் தெரியாதபடி பின்னே நின்றேன். தேவரீர் அறிந்தது எப்படி?” என்று வினவ, அதற்குக் குருகைக் காவலப்பன் அருளிச் செய்த வார்த்தை - "எம்பெருமானும் நானுமாக அநுபவித்துக் கொண்டிருந்தால் பெரியபிராட்டியார் திருமுலைத் தடத்தாலே நெருங்கி அணைத்தாலும் அவளது முகத்தைக் கூடப் பாராத சர்வேசுவரன் என் கழுத்தை அமுக்கி நாலு மூன்றுதரம் அங்கே எட்டிப் பார்த்தான்; அப்படி அவன் பார்க்கும்போது சொட்டைக்குலத்திலே சிலர் வந்திருக்க வேண்டும் என்றிருந்தேன்” என்றார். ஆழ்வார் பக்கலில் எம் பெருமான் பண்ணியிருந்த சிறப்பான கடைக்கண்நோக்கு அவர்க்குப் பிறகு, நாதமுனிகளின் திருவமிசத்தில் பெருகத் தொடங்கிற்று என்பது ஈண்டு அறியத்தக்கது. "எங்கும் பக்க நோக்கறியான்" என்ற இடத்திற்கு இது மிகப் பொருத்தமான உரையாடல் - சம்வாதம். நண்ணா அசுரர் நலிவு எய்த (திருவாய் 10.7:5) என்ற திருவாய்மொழிக்கு (முதல் அடி) ஈ.டு: 'அவ்யபதேஷ்யனுக்கு' அநந்திரத்திலவன்',தமப்பன் செய்ததைக்கேட்டு இவன் செய்தானானான்? என்று சிரித்தான்; ஒரு மதிளை வாங்குங்காட்டில் அத்தர்சனம் குலையாதோ? திருவாய்மொழி என்றும் இராமாயணம் என்றும் வலியன இரண்டு பிரபந்தங்கள் உண்டாயிருக்க என்றானாயிற்று! இப்படி உகவாதார் நெஞ்சு உளுக்கும் 13. சொட்டைக்குலம் - நாத முனிகளுடைய திருவமிசம், ஆளவந்தார் நாதமுனிகளுக்குத் திருப்பேரனார் 14. அவ்யப தேஷ்யன் - எடுத்துப் பேசுவதற்குத் தகாதவன்; நீசன் (கிருமி கண்டன்) அநந்திரத்தில்வன் - அவன் மகன் (விக்கிமசோழன்)