பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்யார்த்த தீபிகை-வழிநூல் 133 உடைய நம் சுவாமிகள் முன்னோர் உரைப் பெருமை குன்றாமலும் அவற்றைத் தழுவியும் ஆழ்வார் பாசுரங்களுக்கு 'திவ்யார்த்ததீபிகை என்ற விளக்கவுரை வரைந்தருளினார். இருளிலுள்ள பொருளைக் காண்பதற்கு விளக்கு பயன்படுவதுபோல அறிவின்மையாகிய இருளிலுள்ள ஞானமாகிய உட்பொருளைக் காண தீபிகையாகிய விளக்கு இன்றியமையாத தாகின்றது. ஆழ்வார்கள் கையாண்டுள்ள சொற்களுக்கும் ஆசாரியப் பெருமக்கள் வழங்கியுள்ள சொற்றொடர்கட்கும் விளக்கும் பாங்கை எடுத்துக் காட்டுவதாக இருப்பதுபற்றி அர்த்த தீபிகை (அர்த்தம் - பொருள்) என்றும், திவ்வியமான (Divine) எம்பெருமான் பெருமையை நுவலும் நூலானது 'திவ்விய' என்ற அடை மொழியையும் கொண்டு திவ்யார்த்த தீபிகை என்னும் திருநாமம் பெற்று வழங்குவதாகக் கொள்வது பொருத்தமாகின்றது. தீபிகை-அமைப்பும் சிறப்பும்:தீபிகையின் உரை ஆழ்வார் ஆசாரியர்கள் திறத்து அமைந்த அரியகருத்துகளை எளிய நடையில் சிறப்பாக விளக்குகின்றது. திருவாய் மொழிக்கு அமைந்த தீபிகை நம்பிள்ளை அருளிய ஈட்டுரையின் வழி முறையைத் தழுவி அற்புதமாக அமைந்ததாகும். ஒவ்வொரு திருவாப்மொழிப் பாசுரத்தின் தொடக்கத்தில் அவதாரிகை (முன்னுரை), தொடர்ந்து பாசுரத்தைக் காட்டல், சொற் பொருள் கூறுதல், விளக்க உரை என்று அமைந்துள்ளது. விளக்கவுரையில் பெரும்பாலும் நம்பிள்ளையின் உரைத் தொடர்கள் பளிச்சிடுகின்றன. ஏனையவற்றில் வேறுமுறை கையாளப்பட்டுள்ளது. ஒவ்வொரு திருமொழிக்கும் அவதாரிகை, பின்னர் பாசுரம்காட்டல், தொடர்ந்து சொற் பொருள், விளக்கவுரை என்று அமைந்துள்ளது. இங்கு சுவாமியின் விளக்கவுரை பெரியவாச்சான் பிள்ளையின் உரைத் தொடர்கள் விரவிவரும்முறையில் அமைந்துள்ளது. இரண்டிலும் பாசுரங்களில் இயைபுகாட்டல் தவறுவதில்லை. இரண்டிலும்,