பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் (சொ.பொ): அலர்மேல்மங்கை-பூவில் வாழ் மகளான பெரிய பிராட்டியார்; இறையும்-ஒரு கணமும்; அகலகில்லேன் என்று - பிரிந்திருக்கமாட்டேன் (என்று சொல்லிக் கொண்டு); உறை மார்பா - நித்தியவாசம் பண்ணப்பெற்ற திருமார்பை உடையவனே நிகர்இல் - ஒப்பற்றதான, புகழாய் - புகழையுடையவனே உலகம் மூன்று உடையாய் - சேதந அசேதநங்களுக்கும் சுவாமியே; என்னை ஆள்வானே - (நீசனான) அடியேனையும் அடிமை கொள்பவனே, நிகர்இல் - ஒப்பற்றவர்களான, அமரர் - தேவர்களும், முனிக்கணங்கள் - முனிவர் சமூகங்களும், விரும்பும் - விரும்பி வந்து பணியும் (இடமான); திருவேங் கடத்தானே - திருமலையில் வாழ்பவனே, புகல் ஒன்று இல்லா - அடையும்இடம் ஒன்றுஇல்லாத அடியேன் - ஏழையேன்; உன் அடிக்கீழ் - உன்திருவடிவாரத்தில்; அமர்ந்து புகுந்தேன் - மிகப்பொருத்தமாக வந்து சேர்ந்து விட்டேன். விளக்கம்: (அகலகில்லேன்) கீழ் ஒன்பது பாசுரங் களாலும் சரண்யனான சர்வேசுவரனுடைய சொரூபத்தையும் தம்முடைய ஆற்றாமையையும் சொன்னார்; இப்பாசுரத்தில் தம்முடைய அபேட்சிதம் (= விருப்பம்) சடக்கென சித்திக்கைக் காகப் பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாக (தகவுரை கூறுபவளாக) முன்னிட்டுக் கொண்டு தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும் அநந்நியகதித்துவத்தையும் தெரிவித்துக் கொண்டு திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகின்றார். எம்பெருமானுடைய திருமார்பிலே நித்தியவாசம் பண்ணாநின்ற பெரியபிராட்டியார் 'இறையும் அகல கில்லேன் (ஒரு கணமும் பிரியமாட்டேன்) என்பதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறாளாம். ஒரு