பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்யார்த்த தீபிகை-வழிநூல் 137 நிமிடமும் பிரியாதே நித்திய சமச்லேசத்துடன் (= சேர்க்கையுடன்) இருக்கும்போது அகலுகைக்கு பிரசக்தி (= காரணம்) தானும் இல்லாதிருக்க இந்த வார்த்தை எதற்காகச் சொல்லவேண்டும் என்னில் போக்கியதையின் (=இன்பத்தின்) கனத்தைப் பார்த்தவாறே "ஐயோ! அகலநேர்ந்து விடுமோ? என்னவோ?’ என்ற அதிசங்கை (= ஐயம்) உண்டாகக் கூடியது; அந்த அதிசங்கை சொல்லுவிக்கச் சொல்லுகிறபடி என்ப. அலர்மேல் மங்கை: புஷ்பத்தின் பரிமளம் (=மணம்) தானே ஒரு வடிவு கொண்டாப்போலே தோன்றினவளான பூரீமகாலட்சுமி அந்தப் பூவில் வசிக்க ருசியாதே அதை விட்டுத் திருமார்பிலே வந்து சேர்ந்தது அப்பூவிற் காட்டிலும் செளகுமார்யாதி (=அழகு)சயமுள்ள இடம் திருமார்பே என்று அவ்வளவு சிறந்ததான ஸ்தானம் (=இடம்) கிடைத்தும் 'இது நமக்கு நிலைக்குமோ? நிலைக்காதோ? என்று அதிசங்கை தோன்றுவது விஷய வைலட்சண்யப்ரயுக்தம். உறைமார்பா: அப்படிப்பட்ட பெரியபிராட்டியார் நித்தியவாசம் பண்ணும் திருமார்பையுடையவனே என்ற வாறு. எம்பெருமானுக்கு உபாயத்துவமும் உபேயத்துவமும் ஆகிற இரண்டு தன்மைகளும் உண்டானாப் போலே பிராட்டிக்குப் புருஷகாரத்துவமும் உபேயத்துவமாகின்ற இரண்டு தன்மைகளும் உண்டு; புருஷகாரத்துவம் என்ற தன்மையை நினைத்து இப்போது இங்குப் பிராட்டியின் புருஷகாரம் என்று அறியக்கடவது. எம்பெருமானுடைய நாராயணத்துவ பிரயுக்தமான ஸ்வபாவிக சம்பந்தத்தைத் தெரிந்துகொண்டு ஆச்ரயிக்கும்போது இவளைப் புருஷ காரமாக முன்னிடவேண்டிய அவசியம் என்ன? என்னில்: குளிர்ந்த ஜலத்திலும் கூடக் கொடிதான நெருப்பு கிளருமாப் போலே சர்வபூதஸ் ஹ்ருத்தான அவன் திருவுள்ளத்திலே சேதநன் அளவு கடந்து பண்ணும் அபராதம் அடியாகச்