பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் சுவாதந்திரியத்தைக் கண்டோ தன்னுடைய அபராதங்களை நினைத்தோ சேதநன் அஞ்ச வேண்டிய பிரசக்தி இல்லை. அன்றியும், பிராட்டியானவள் எப்போதும் எம்பெருமானோடு கூடியே இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ளுமளவில் எந்த சமயத்திலும் எம்பெருமானை ஆச்ரயிக்கலாம் என்பது தேறி நிற்கும். 'புருஷகாரம் செய்பவள் அங்கே இருக்கும் காலம் பார்த்து ஆச்ரயிக்க வேணும் என்று சமய பிரதிட்சை வேண்டியதில்லை; ஆச்ரயிக்க வேணும் என்கிற ருசி பிறக்க வேண்டுமத்தனையே. பிராட்டியின் புருஷகாரம் அவசியம் வேண்டிய தென்பதை விபவாவதாரகாலத்துச் செய்தியாலும் தெரிந்து கொள்ளலாம். இராமாவதாரத்தில் அளவு கடந்த அபராத்தைச் செய்து பிரம்மாஸ்திரத்திற்கு இலக்காய் தலையறுப்புண்ண வேண்டி காகம் கிருபைக்கு இலக்காய்த் தலை பெற்றுப் போனது பிராட்டி அருகில் இருத்ததனா லேயாம். அவ்வளவு அபராதியல்லாத இராவணன் இராம சரத்துக்கு இலக்காய் முடிந்து போனது இவளது சந்நிதி இல்லாமையினாலேயாம். இவ்வர்த்த விசேடங்களையெல்லாம் ஈட்டில் மிக அருமையாக அருளிச் செய்யப்பட்டவை; "ஒருநாள் பட்டர் பிள்ளையழகிய மணவாள அரையர்க்குத் துவயம் அருளிச் செய்கைக்காக எல்லோரும் போங்கோள் என்ன, நஞ்சீயரும் எழுந்திருந்து போய் நம்மை இராய்' என்று அருளிச் செய்திலர் என்று வெறுத்திருக்க, அப்போதே ஜீயர் எங்கிருக்கிறார்? என்று கேட்டருளித் தேடியழைத்துக் கூட வைத்துக் கொண்டிருந்து துவயத்தை அருளிச் செய்யா நிற்கச் செய்தே அப்போது அருளிச் செய்த வார்த்தை" என்று தொடங்கி ஈட்டு பூரீசூக்திகள் சேவிக்க, நிகரில் புகழாய்! இத்யாதி. கீழ் முதலடியில் புருஷகார வரணம் பண்ணினவாறே அந்த புருஷகார பலத்தாலே