பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்யார்த்த தீபிகை-வழிநூல் i41 எம்பெருமானுடைய சுவாதந்திரியமானது தலைமடிந்து தலையெடுக்கும் குணங்கள் சில உண்டு; அந்தக் குணங்கள் ஆச்ரயண செளகாரிய பாதகங்கள் என்றும் ஆச்ரித கார்யபாதகங்கள் என்றும் இரண்டு வகுப்பாயிருக்கும். அஞ்சாமல் கூசாமல் நாம் ஆச்ரயிக்கும்படி அநுகூலப் படுத்துகின்ற குணங்கள் ஆச்ரயண செளகர்யா பாதகங்கள் எனப்படும். வாத்சல்யம், சுவாமித்வம், செளசீல்யம், செளலப்பியம் என்கின்ற குணங்கள் ஆச்ரயண செளகர்யா பாதகங்களாம். ஆச்ரயனோன் முகனான இச்சேதநன் தன் தோஷங்களைப்பார்த்து அஞ்சும்போது தோஷ போக்யத ரூபமான வாத்சல்யத்தை நினைந்து அந்த அச்சம் தீரலாம். நம் கார்யம் செய்வானோ செய்யானோ என்ற சங்கை யுண்டானவளவில் இழவு பேறு தன்னதாம்படியான சுதந்திரத்தை நினைத்து அச்சம் தீரலாம். உபய விபூதிக்கும் கடவனாயிருக்கும் பெருமைக்கு பிரகாசமான சுவாமித்வத்தைக் கண்டு தன்னுடைய தண்மையை அநுசந்தித்து அகல நினைக்க நேருமளவில் தாழ நின்றவர்களோடே புரையறக் கலக்கும் சுவபாவமான செளசீல்யத்தை நினைத்துத் தெளிவு பெறலாம். இந்திரியங்களுக்கு எட்டாதவனான அவனை நாம் எப்படி ஆச்ரயிப்பதென்று பிற்காலத்தில் நினைக்குமளவில், தன்வடிவை சட்சூர்விஷயமாக்குகிற கையாகிற செளலப்பியத்தை, நினைத்துத் தெளியலாம். ஆக இந்த நான்கு குணங்களும் ஆச்ரயண செளகர்யா பாதகங்களாகையாலே இவை இங்கு வரிசையாக அநுசந்திக்கப்படுகின்றன. எங்ங்ணம் என்னில்: (1). நிகரில் புகழாய் என்று வாத்சல்யத்தைச் சொன்னபடி, (2). உலகம் மூன்று உடையாய் என்று சுவாமித்துவத்தைச் சொன்னபடி: (3) என்னை யாள்வானே என்று செளசீல்யத்தைச் சொன்னபடி (4) நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே என்று செளலப்பியத்தைச் சொன்னபடி,