பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் விதத்தைப் பயிற்றுவிக்கைகாகத் தான் இறங்கிக் கையை முதுகிலே கட்டிக் கொண்டு) தண்ணி குடித்தவனும்; கருமுகிலை - காளமேகம் போன்றவனும், தஞ்சை கோயில் - தஞ்சை மாமணிக்கோயிலிலே; தவநெறிக்கு ஓர் பெரு நெறியை - (தன்னைக் கிட்டுகைக்கான) உபாயங்களிலே சிறந்த உபாயம் தானாக, வையம் காக்கும் - உலகத்தைக் காப்பதற்காக, கடுபரிமேல் கற்கியை - கடுநடையுடைய குதிரையின்மேலே கற்கி அவதாரம் செய்யப் போகிற வனுமான எம்பெருமானை, கடிபொழில்சூழ் - மணம் மிக்க சோலைகள் சூழ்ந்த, கடல் மல்லை தலசயனத்தே - திருக்கடல் மல்லையிலே, கண்டு கொண்டேன் - (நான்) கண்டு கொண்டேன். விளக்கம்: உலகு உய்ய உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்நின்றானை: பரமபுருஷனான எம்பெருமானுக்கு சேதநாசேதநங்கள் முற்றும் சரீரங்கள் என்பது சித்தாந்தம்; அங்காநி அந்யா தேவதார: என்றும் விசேஷித்தும் ஒதப் பெற்றுள்ளது. ஆகவே, சரீர-சரீரி பாவனையாகிற விசிஷ்டவேஷத்தையிட்டுப் பார்க்கு மளவில் வேற்றுமை ஏற்படுவதற்கு வழியின்றியே 'ஸப்ரஹ்மா ஸ் சிவ ஸேந்திரஸ் லோகூடி, பரமஸ் ஸ்வராட் என்றும், ஸ்ர்வம் கல்விதம் ப்ரஹ்ம’ என்றும் அபேத மாயுள்ளதாகச் சொல்லும் படியாயிருக்கும்; உலகத்தில், சரீரத்தோடு கூடின ஒரு ஆன்மாவைப்பற்றி நாம் வயவ ஹரிக்கும்போது, சரீரத்தைத் தனிப்பட்ட வஸ்துவாகவும், சரீரியான ஆன்மாவைத் தனிப்பட்ட வஸ்துவாகவும் பிரித்து இரணடாக வ்யஹரிக்காமல் இரண்டையும் சேர்த்து ஒரே பொருளாக வ்யவஹரியா நின்றோமன்றோ? இந்த ஐக்கிய வ்யவஹாரத்திற்கு சரீர-சரீரிபாவனையாகிற சம்பந்தமே நிமித்தம்; அதுபோலவே, பிரமன் முதலிய தேவதைகட்கும் எம்பெருமானுக்கும் சரீர-சரீரி பாவனை சம்பந்தம் சாத்திரச் சித்தமாயிருப்பதால் அந்த சம்பந்தத்தையிட்டு நோக்கு