பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் அக்கன்றுகட்கு நீருண்ணும் விதத்தைப் பழக்குவிப்ப தற்காகக் கண்ணபிரான் தான் தன் முதுகிலே கையைக் கட்டிக் கவிழ்ந்து நின்று தண்ணிரமுது செய்து காட்டுவன்; அதைச் சொல்லுகிறது 'வரைமீகானில் தடம்பருகு' என்று, தவநெறிக்கு ஓர் பெருநெறியை எம்பெருமானைப் பெறுவதற்குக் கருமயோகம், ஞானயோகம், பக்தியோகம் முதலிய உபாயங்கள் பல விதிக்கப்பெற்றிருந்தாலும், ஆனையின்மேல் ஏற நினைப்பார்க்கு ஆனையின் காலைப் பற்றியே ஏறவேண்டுவதுபோல் எம்பெருமானது திருவடிகளைப் பற்றியே அவனைப் பெறுதல் வேண்டும் என்றும், அவனே சித்தோ பாயம் என்றும் பரமைகாந்தி சித்தாந்த மாயிருத்தலால், எல்லா உபாயங்களிலுள்ளும் சீரிய உபாயம் தானேயாயிருப்பவன் என்றும் சொல்லப்பெற்றது. தருமங்கள் முற்றும் குன்றி அதருமங்கள் அதிகரித்துக் கலி முற்றுங்காலத்தில் எம்பெருமான் குதிரை மீதேறி வந்து கல்கி என்னும் திருநாமம் உடையவனாய் துஷ்டர்களைத் தொலைத்து மண்ணின் பாரம் நீக்குவான் என்று நூற் கொள்கையுள்ளதனால் 'கடும் பரிமேல்கற்கியை' என்றார்; இது பவிஷ்யவதாரம். இப்படிப்பட்ட எம்பெருமானைத் திருக்கடல் மல்லையிலே சேவிக்கப் பெற்றேன் என்றாராயிற்று.” இவ்வுரையில் உரைமன்னர் பெரியவாச்சான் பிள்ளை யவர்களின் உரைகளிலுள்ள சொற்றொடர்கள் விரவி வருதலைக் காணலாம். இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளாலும் திவ்வியார்த்த தீபிகை ஒரு சிறந்த வழிநூலாகத் திகழ்வதை அறியலாம். 7. சுவாமி மிக்க தமிழ் புலமை உள்ளவர். இடைஇடையே வரும் வடிமொழிச் சுலோகத் தொடர்கட்கு அடிக்குறிப்பில் பொருள் விளக்கம் காட்டியிருப்பின் வடமொழி அறியாதவர்கட்குப் பேருதவியாக இருந்திருக்கும்.