பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பிரதாய வைணவ மரபுகள் 149 பகவானுடைய ஆபரணங்கள் திவ்வியாபரண ஆழ்வார்கள் என்றும் திருநாமத்தால் வழங்கப்பெறும். உலகிலுள்ள மற்ற ஆபரணங்களுக்கில்லாத மென்மை, மணம், அழகு, ஒளி முதலியன இவ்வாபரணங்களுக்கு உண்டு. சங்கு சக்கரம் முதலிய ஆபரணங்கள் பகவானை வெறுத்து நிற்பவர்கட்கு ஆயுதங்களாகவும், விரும்பி நிற்பவர்கட்கு ஆபரணங்களாகவும் தோன்றும். ஆபரணங்களுக்கு எங்ங்னம் தோற்றம் அழிவு முதலிய குற்றங்கள் இல்லையோ அங்ங்னமே ஆயுதங்களுக்கும் இவை இல்லை. நித்திய சூரிகளே திவ்வியாபரணாழ்வார்கள்', 'திவ்வியாயுதாழ் வார்கள்’ எனப் பெயர் பெற்றுள்ளனர். இவை பகவானுடைய ஆயுதங்கள் என்னும் நிலைக்கேற்ப ஞானம், சக்தி முதலிய திருக்குணங்களைப் பெற்றுள்ளன. (4) நம்மாழ்வாரின் திருமேனி : ஆழ்வார்கள் பன்னிருவர்களுள் சடகோபர் நம்மவர் என்று போற்றத்தக்க பெருமை வாய்ந்து நம்மாழ்வார்’ என்ற சிறப்புத் திருநாமத்தால் வழங்கப்பெறுகின்றார். ஏனைய ஆழ்வார் களை நம்மாழ்வாரின் ஒவ்வோர் அவயவமாகவும் நம்மாழ் வாரை அவயவியாகவும் வழங்குவது மரபு. ஆழ்வாரின் திருமுடி நம்மாழ்வார். பூதத்தாழ்வாரைத் தலையாகவும் பொய்கை பேயாழ்வார்களைத் திருக்கண்களாகவும், பெரியாழ்வாரைத் திருமுகமண்டலமாகவும், திருமழிசையாழ்வாரைக் கழுத்தாகவும், குலசேகராழ்வாரையும் திருப்பாணாழ்வாரையும் திருக்கை களாகவும், தொண்டைரடிப்பொடியாழ்வாரைத் திருமார்பாகவும், திருமங்கையாழ்வாரைத் திருநாபியாகவும் மதுரகவிகளையும் எம்பெருமானாரையும் (இராமாநுசர்) திருவடிகளாகவும் பெரியோர் அருளிச் செய்வர். நம்மாழ்வார் திருமால் திருவடியில் எப்போதும் விளங்குகிறார் என்பது வைணவ சமயக் கொள்கை. அதனால் திருமால் திருக்கோயில்களில் அப்பெருமானைச் சேவிக்க முடிமீது