பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15O காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் அவர் திருவடியாக வைக்கப்பெறுவதைச் சடகோபன், சடாரி என்று வழங்குகின்றனர். சடகோபன், சடாரி என்பன நம்மாழ்வாரின் திருப்பெயர்களாகும். (5) இராமாநுசரின் திருமேனி : நம்மாழ்வாரைத் தலையாகவும், நாதமுனிகளைத் திருமுகமாகவும், உய்யக்கொண்டாரை (புண்டரீகாட்சரைக்) கண் ஆகவும் மணக்கால் நம்பியை (இராம மிஸ்ராவைக்) கன்னமாயும், ஆளவந்தாரை (யாமுனாசாரியரை) மார்பிடமாகவும், பெரிய நம்பியைக் கழுத்தாகவும், திருக்கச்சி நம்பிகையைத் திருக் கையாகவும், திருக்கோட்டியூர் நம்பியை ஸ்தனமாயும், திருவரங்கப் பெருமாளரையரை வயிறாகவும், திருமாலை யாண்டானை முதுகாகவும், கிடாம்பியாச்சானை இடுப்பாகவும், எம்பாரை இடையாகவும், பட்டரையும், நஞ்சீயரையும் புட்ட கங்களாகவும், நம்பிள்ளையைத் துடையாகவும், வடக்குத் திருவீதிப் பிள்ளையைத் முழங்கால்களாகவும், பிள்ளை லோகாகாரியரைத் திருவடியாகவும், திருவாய்மொழிப் பிள்ளையை பாதரேகையாகவும், மணவாள மாமுனிகளைத் பாதுகையாகவும், சேனாபதி ஜீயரை ஊர்த்துவ புண்ட்ரமாகவும், (திருமண்காப்பு) கூரத்தாழ்வானைப் புரிநூலாகவும், முதலியாண்டனைத் திரிதண்டமாகவும், கிடாம்பியாச்சானைக் கமண்டலமாகவும், வடுக நம்பியைக் கல்லாடையாகவும், திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் தோமாலையாகவும், பிள்ளையுறங்காவில்லிதாசரை நிழலாகவும் - இங்ங்ணம் இராமநுசரைச் சர்வாசார்ய சொருபராகக் கொள்வது மரபு. (6) கோயில், திருமலை பெருமாள் கோயில் திருவரங்கத்து அழகிய மணவாளன் இராமாவதாரக் கூறுடையவன் (தோலாத தனிவீரன் தொழுத கோயில்) என்பதும், திருவேங்கடத்துத் திருவாழ்மார்பன் (சீநிவாசன்) கண்ணன் அவதாரக் கூறுடையவன் (கண்ணன் அடியினைக் காட்டும் வெற்பு) என்பதும், அத்திகிரி அருளாளன் இந்த