பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் (ii) திருக்கோட்டியூர் திருக்கோயிலின் விமானம் 'அட்டாங்க விமானம் என்பது 90 அடி உயரம் உள்ளது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை. தஞ்சைக் கோபுரத்தின் நிழல்போல ஒன்றன்மீது ஒன்றாக மூன்று தளங்களையுடையது. மேல்தளத்தில் திசைக்கொன்றாக எட்டு விமானங்கள் உள்ளன. எட்டு விமானங்கள் திருமந்திரத்தின் எட்டெழுத்துகள் போலவும் விமானத்தின் மூன்று தளங்கள் திருமந்திரத்தின் மூன்று பதங்கள் (ஒம் + நமோ + நாராயணாய) போலவும், மூன்றெழுத்துகளுடன் கூடிய (அ+உ+ம) பிரணவம் போலவும் அமைந்திருப்பதாக ஐதிகம்.