பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் ஒரு பிறவியில் நேரிடும் அனைத்துத் தொடர்புகளும் பிறிதொரு பிறவியில் இருப்பதில்லை. ஆனால் இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள சம்பந்தம் 'உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழியாது (திருப். 28) என்று ஆண்டாள் அருளியவாறு அழியா திருத்தலாகும். இதனைப் பிள்ளைஉலக ஆசிரியர் அருளிச் செய்த 'நவவித சம்பந்தம்' என்ற நூலில் தெளிவாகக் காணலாம். வேதாந்தங்களில் குறிப்பிடப் பெறும் பக்தி இங்ங்னம் ஆழ்வார்களிடம் காதல் முறையில் பரிணமித்து நிற்றலை அறிய முடிகின்றது. இவர்கள் எம்பெருமான்மீது கொள்ளும் காமம் பகவத் விஷயகாமம்' என்று வழங்கப்பெறும். இங்ங்ணம் இவர்கள் மாதவன்மீது கொள்ளும் காமம் மக்கள் மங்கையர்மீது கொள்ளும் 'விஷய காமத்தினின்றும்' மாறுபட்டது. ஆயினும் சிற்றின்ப அநுபவமாகிய காதலுக்குக் கூறப்பெறும் அகப்பொருள் துறைகள் யாவும் பகவத் விஷய காமத்திற்கும் கூறப்பெறும், சிற்றின்ப அநுபவத்திற்குக் கொங்கை முதலியன சாதனமாயிருப்பதுபோல பகவத் விஷயாதுபவத்திற்கும் பரபக்தி, பரஞானம்’, பரமபக்தி' என்பவை இன்றியமையாதனவாக இருப்பதால் அவையே கொங்கை முதலான சொற்களால் இவ்வாழ்வார்களின் அருளிச் செயல்கள் கூறப்பெறுவனவாக சமயச் சான்றோர்கள் பணிப்பர். 1. பரபக்தி - எம்பெருமானை நேரில் காணவேண்டும் என்ற ஆவல். 2. பரஞானம் - எம்பெருமானை நேரில் காணல். 3. பரமபக்தி - எம்பெருமானை மேன்மேலும் இடைவிடாது அநுபவிக்க வேண்டும் என்னும் ஆவல். அன்றியும், எம்பெருமானோடு கூடினபோது சுகிக்கும்படியாகவும், பிரிந்தபோது துக்கிக்கும்படியாகவும் இருப்பது பரபக்தி, பகவானுடைய முழுமையான நேர்காட்சி பரஞானம்; அவனுடைய அநுபவம் பெறாவிடில் நீரை விட்டுப்பிரிந்த மீன்போல மூச்சு அடங்கும்படி இருத்தல் பரமபக்தி, இவ்வாறு நம் பண்டைய ஆசாரியர்கள் நிலைப்படுத்துவர்.